Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

காதலர் தினம்

4 comments

அனைத்து நண்பர்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்.

உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடபடுகிறது. காதலர் தினத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு அதிகமான எதிர்ப்புகள் உருவாகிவிட்டன. காதலர் தினத்தை கொண்டாடுவோர், காதலர் தினத்தை எதிர்போர் என இரு வர்க்கத்தினர்கள் உருவாகிவிட்டர்கள்.
பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி போன்ற எந்த ஊடகத்தை எடுத்துக்கொண்டாலும், இரண்டும் நிறைந்தும் காணப்படும். காதலை எதிர்ப்போர் ஒரு புறமும், காதலை வளர்ப்போர் ஒரு புறமுமாக இருக்கிறார்கள். அண்மையில் ஒரு பத்திரிகையில் காதலர் தினத்துக்கு முன்பே காதல் எதிர்ப்பு கட்டுரையை வாசித்தேன்.

            மிகவும் கவலையாக இருந்தது. இருந்தாலும், காதலுக்கு எதிர்ப்பு வருவது தப்பாக எடுக்க முடியாது. காரணம் காதலின் அர்த்தம் புரியாதவர்கள் செய்யும் லீலைகள். தமது இளமையை சோதிக்கும் ஒரு வீண் முயற்சி. காதல் என்பது கல்யாணத்துக்கு முன்னர் கற்பமாதல் அல்ல. அதனை எந்த ஒரு ஆணும், பெண்ணும் புரிந்து கொள்ளவேண்டும்.

        எந்த ஒரு ஆண், பெண்ணும் சிறு வயதுகளிலேயே காதலில் விழுவது இன்று எங்கும் பார்க்கப்படும் விடயம். தெருக்கள், பஸ்கள் என்று எங்கும் காண முடிகிறது. காதலின் உண்மையான விளக்கம் என்னவென்று தெரியாத வயதில் காதல். இதனை வெறும் எதிர்ப்பால் கவர்ச்சியா அல்லது உண்மையான காதலா என்று உணரும் பக்குவம் அவர்களுக்கு இருக்கப்போவதில்லை.

         ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு பதினைந்து பதினாறு வயதில் வரும் காதலுக்கும் இருபதுகளில் வரும் காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.எதிர்பார்ப்புக்கள் லட்சியம் என பல விடயங்கள் இருபதுகள் காதலில் காணப்படும் வேளையில் இவைகள் பதின்ம வயதில் வரும் காதலுக்கு பெரிதாக தென்படப்போவதில்லை.

       காதலை வெற்றிபெறவைக்க தேவையான மனவுறுதி இருக்கிறதா,சரியான துணையைத் தான் தெரிவுசெய்கிறோமா என்பதில் மிகுந்த கவனம் தேவை. இது தான் முதுமையிலும் கூட வரும் பந்தம்...

      உண்மைக்காதல், பொய்க்காதல் என்ற பிரச்சனைகள் காலம் கடந்தும் இருந்துவருகிறது. மாறாக இன்று அனைவருக்கும் எட்டும் நிலையில் உள்ள காதல் காயை எத்தனை பேர் திருமணம், குழந்தைகள் என்று நீண்ட கால பந்தமாய் கனிய வைக்கிறார்கள்.. இது கேள்வியாகவே உள்ளது.

"காதல் என்பது அன்பு .ஒருவர் தன் தாய் மீது வைக்கின்ற அன்பும் காதலே.காதலி மீது வைக்கின்ற அன்பும் காதலே.தன் மனைவி மீது வைக்கின்ற அன்பும் காதலே.பிள்ளையின் மீது வைக்கின்ற அன்பும் காதலே.காதலால் வாழ்பவர்கள் உள்ள உலகிலே,காதலால் காணாமல் போனவர்களுமுண்டு.காதல் புனிதமானது -  இன்றுகாதலின் புனிததைக் கெடுப்போருமுண்டு..இருப்பினும் என்றும் காதல் புனிதமானது...!!"

(ஒரு நண்பனின் வலைதளத்தில் ஒரு கடிதத்தை பர்த்தேன்,)


நெப்போலியன் தன் காதலி யோசபினுக்கு எழுதிய காதல் கடிதம்


அன்பே!

நேற்று போர்களத்தில் கடுமையான வேலை,கொஞ்சம் கூட ஓய்வில்லை.உணவோ,உறக்கமோ இன்றி ஓரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

அது என்னால் எப்படி சாத்தியப்படுகிறது என்று எல்லோரும் திகைத்தனர். என்ன?.....உனக்கு ஏதாவது புரிகிறதா? நீ எழுதும் கடிதங்கள் என் சட்டைப்
 பையிலேயே இருப்பது வழக்கம் சோர்வு ஏற்படும் போது நான் உன் கடிதங்களை எடுத்துப் படிப்பேன்.

அவ்வளவுதான் சோர்வு பறந்துவிடும் புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும். 
அப்புறம் பசியாவது தாகமாவது! ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனதை அலட்டிக் கொள்ளக்கூடாது.

துன்பம் என் நண்பன் அதை நான் வெறுக்கமாட்டேன்.உலகத்தில் அபார சாதனைகளைச் சாதிப்பதற்காகவே பிறந்த எனக்குத் துன்பந்தான் தூய நண்பன். இன்பம் என் விரோதி.அது என்னைச் சோம்பேறியாக்கி விடும் அதை நான் வெறுக்கின்றேன் இரவில் அதிக நேரம் கண் விழிக்காதே,உடம்பை ஐர்க்கிரதையாக்க கவனித்துக்கொள்.

அன்புள்ள

நெப்போலியன்இவாறான காதல்கள் வாழ்ந்த உலகத்தில் தப்பான காதல்கள் வாழ்தல் முறையல்ல...

இன்றைய சினிமாவை குற்றம் சுமத்தும் பெற்றோருக்கு....

பெற்றோர்களே உங்களை கேட்டுக்கொள்கிறேன், சினிமா பார்ப்பது தப்பன்று, ஆனால் மாணவர்களுக்கு சினிமா வாழ்க்கையாகிவிட கூடாது, அதை கண்டிப்பாக நீங்கள் இருக்க வேண்டியது அவசியம் தான். இருபினும் நீங்களும் தொடர் நாடகம் பார்த்துவிட்டு அவர்களை குற்றம் சொலக்கூடாது, சில சமயங்களில் உங்கள் கண்டிப்பே அவர்களை திரையரங்கு வரை போகத்தூண்டலாம்.

அதனுடன் எந்த சினிமாவிலும் காதலியுங்கள் என்று சொல்லவில்லை, எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதைகள் ஆகின்றது. இளைஞர் யுவதிகளே, அவ்வாறு நீங்கள் வாழ வேண்டும் என்று நினைப்பது ஏன்? அவை உங்களுக்கு வேண்டாதவையாக இருக்கலாம், இருந்தால் தொடராதீங்கள். 

பெற்றோர்களே..
உங்களுடைய அன்பு உங்கள் குழந்தைகளுக்கு ஒழுங்காக கிடைக்குதா என பல முறை சிந்தியுங்கள், ஆதாரம் தேடி கோடி படருவதைப்போல் அன்பைத்தேடி இதயமும் அலையும், இதன் விளைவில் ஒன்றாக காதலையும் கொள்ளலாம்,
உங்கள் கண்டிப்பான அன்பால் பிள்ளைகளை நேசியுங்கள்.

காதல் வந்தால், திருமணத்தை அணுகுங்கள், சாதி மதம் பார்க்காதீர்கள், ஜாதகம் பொருந்தும் அளவுக்கு மனசு பொருந்துவதில்லை, பொருந்திய மனசை உடைக்காதீர்கள். 

இன்றைய நவீன தொழில் நுட்பங்களை தவறென கொள்ளும் பெரியோருக்கு...

பெரியோர்களே,
நவீன சாதனங்கள் காரணமாக அதிகளவு பக்கவிளைவு வருகின்றன, இல்லை என்றவில்லை, இருப்பினும் அத்திய அவசிய தேவைகளில் ஒன்றாகிப் போய்விட்டது.

செல் பேசி மாணவர்களுக்கு அவசியம் எல்லை என்று நீங்கள் மேடைகளில் கூறலாம், அதன் பாதிப்புக்களை விளக்கலாம், நீங்கள், உங்கள் குடும்பத்தினர் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

நீங்கள் வாங்கி கொடுத்து விட்டு, "எந்த நேரமும் உதில தான்.." என்றால் பிள்ளைகளில் தப்பு கிடையாது. வயது தப்பு பண்ண தோன்றும், திருத்தி புரிய வைக்க வேண்டியது.உங்கள் கடமை அல்லவா?

பிள்ளைகள் பாதையை தீர்மானிக்கலாம், ஆனால் வழிகாட்டி நீங்களே....

இன்றைய நாகரிகத்தை விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு.....

நாகரிகம் பிற்பட்ட காலத்தில் வந்தது, அதை நிரந்தரமாக்குவது ஏன், ஒவோருவருடைய ஒவ்வொரு நடத்தியிலும், நாகரிகத்தின் பாதிப்பு இருக்கிறது, அதனை இயன்ற வரை குறைப்போம்.. வாழும் காலம் குறைவு அதை இனி வாழ்ந்து பாப்போம்,

இளைஞர்களே....

உங்கள் நடை உடை பாவனையால், பெண்களை கவர நீங்கள் படும் பாடு எனக்கு தெரியும், உங்கள் ஆடைகள் தேர்வில் இருந்து, வாசனை திரவியங்கள், மோட்டார் சைக்கிள், உங்கள் சிகை அலங்காரம், செல் பில், என்பனவற்றுக்கு எவளவை நாள் ஒன்றுக்கு வீணாக்கிரீர்கள், அதை பார்த்து காதல் வந்தால் அது உண்மைக்காதலா? 

செலவாகும் பணத்தை சேமியுங்கள், முதலிடுங்கள். தேடி வரும் பெண்கள், கல்யாணத்தின் பின் காதலியுங்கள், காதலித்தால் கல்யாணம் பண்ணுங்கள்..
அதற்கு முன் கற்பம் ஆக்காதிர்கள்.

 யுவதிகளே....

ஏமாறுவதற்கோ,  ஏமாற்றப் படுவதற்கோ நீங்கள் ஒன்றும் மடந்தையர் இல்லை, உங்கள் அழகை படம் போட்டு காட்ட தேவை இல்லை, "ஆள் பாதி, ஆடை பாதி " எனும் மொழி கூட, "ஆடை கால், ஆள் முக்கால்" என மாறிவிட்டது. காதல் என்று ஆண்களை ஏமார்றாதிர்கள், பெற்றோரை ஏமார்றாதிர்கள்,

படிக்க செல்லும் வயதிலே தாய் ஆகாதிர்கள், உங்கள் மானத்தை காப்பற்ற நாளைய தலைமுறைகளை குப்பைகளில் போடுகிறீர்கள். காதலுடன் காமத்தை சேர்க்காதீர்கள்..

காதலர்களே..

காதல் மட்டும் என்றும் நிரந்தரமானது, அதற்க்கு வழங்கப்படும் பெயர் மட்டுமே மாறுபடும்.. அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, இரகம்.... என பல. காதலித்தால் கல்யாணம் செய்யுங்கள். கல்யாணம் செய்வீர்கள் என்றால் காதலியுங்கள்... எதிர்ப்புகள் தாண்டியும் காதல் வாழும்,  ஆனால் வீட்டை தாண்டினால் காதல் வாழாது.. சம்மதம் கிடைத்தால் சேருங்கள்.. இல்லாவிடில் காதலுக்காக வாழுங்கள் காதலுடன்...

அடுத்த காதலர் தினம் உண்மைக்காதலருக்காக காத்திருக்கிறது.. உங்கள் காதலின் தன்மையை, அளவை நீங்களே கணித்திடுங்கள்..

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

 1. Anonymous3:39:00 pm

  சாதாரணமான நடைமுறை வாழ்க்கையை பிரதி பலிக்கும் உண்மைகள்..

  ReplyDelete
 2. kaathal kaathalaaka ellai enna saiyalaam

  ReplyDelete
 3. உண்மையா காதலியுங்கோ

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா