Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

தந்தையின் பெயர் தெரியாமல்..

3 comments

காதல் என்பது இருமனிதர்கள் சந்தித்துக் கொள்ளும் தருணத்தில் ஏற்படும்  உணர்வுதான். அது ஆண், பெண்ணுக்கு இடைப்பட்டதாகவோ அல்லது இரு உயிர்களுக்கு இடைப்பட்டதாகவோ அமைந்துவிடுகின்றது. தமது தேவைகளை  நிறைவேற்றிக் கொள்வதற்கு
காதல் வயப்படும் நபர்களிடம் இருக்கும் சாதகத் தன்மைகளிலேயுமே அந்தக் காதலின் புனிதத்தன்மை இருக்கிறது. அதன் நிலைத்திருப்பும், உண்மைத் தன்மையும் அடங்கியிருக்கின்றன. இது சில சமயங்களில் கொல்லபடுகிறது. மீறப்படுகிறது.
    அண்மைக்காலமாக யாழ்ப்பாணப் பத்திரிகைகள் வெளியிடும் காதல் தொடர்பான செய்திகள் அதிர்ச்சி தருவனவாயுள்ளன. ஆசிரிய தலையங்கம், வாசகர் முகம் போன்றவற்றில் தொடர்ச்சியாக அதுதான். பிறந்த சூடு ஆறும் முன்னேயே பல ஆண், பெண்  சிசுக்கள் தெருக்களில் எறியப்படுகின்றன. பற்றைக்காடுகளுக்குள் உரப்பைகளில் சுற்றிப் போடப்படுகின்றன. வீட்டு பின் புறங்களில் புதைக்கப்படுகின்றன, கிணற்றுக்குள் போடப்படுகின்றன. இந்த நிலைமை நல்ல பண்பாடுமிக்க சமூகமொன்றுக்கு ஏற்பட்ட அவமானம். கற்புள்ள பெண்களுக்கும் வந்த களங்கம் என்றே கொள்ள வேண்டும்.

        கடந்த ஆண்டு வெளியான யாழ்ப்பாணப் பெண்கள் பற்றிய தரவு அறிக்கை தொடர்பான கட்டுரை ஒன்றை பத்திரிக்கை வாயிலாக அறிந்தேன்.  250 இற்கும் மேற்பட்ட பெண்கள் தந்தையின் பெயர் தெரியாத குழந்தைகளை வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைகளில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபடும் திருமணமாகாத இளம் பெண்களின் தொகை பல மடங்காக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் உயர்தரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பெண்பிள்ளைகளே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது என அறிய முடிகிறது.

நவீன நாகரீகம்


       நவீன நாகரிகம் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கட்டி ஆளும் கயிறாகவே இருக்கிறது. கவர்ச்சி இது தான் பாலியல் ஆசைகளை துண்டும் ஒரு விளக்காகும். புதிய ஆடைகளின் அணிவகுப்பு, தொழில் நுட்பங்களின் படை எடுப்பு என்பன நாகரிகம் எனும் சொல்லை உருவாக்குகிறது,

தற்போதைய பெண்கள் அணியும் ஆடைகளை சொன்னால் அது மிகவும் ஆபாசமாக போய் விடும்..  அவளவத்திற்கு சகிக்க முடியாத ஒன்றாகும். யாழ்ப்பாண வீதிகளும், கல்வி நிலையங்களும் தான் ஆடைகளின் காட்சிக்கு ஏக உரிமை பெற்றவர்கள். அங்கங்களை மறைக்க போடும் ஆடைகள் இப்போ அவற்றை காட்டவே அணியப்படுகின்றன, இதனால் தன்னிலை மறக்கும் இளைஞர்களின் தவறான உறவினால் பிறக்கும் குழந்தைகளும்  அதிகரித்து விட்டார்கள். தப்பை மறைக்க பிள்ளையை கொல்லும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்

கல்வி நிலையங்கள் 

    இன்றைய இளைஞர், யுவதிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட கைத்தொலைபேசி, இணையம் போன்றன உறவைப்பேண வைக்கும் சாதனமாகிறது. அந்த உறவு கர்ப்பப்பைவரை சென்று வயிற்றை நிரப்பிவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் வரை நிலைத்திருக்கும். வணிகமயப்பட்டுப் போன கல்வி, சாதாரணதரம் படிக்கும் பிள்ளையைக்கூட நகரம் நோக்கி வர வைக்கிறது. இவற்றால் முகம் முன்தெரியா, பின்தெரியா நபர்களோடு தொடர்பினை உருவாக்கி வருகிறது. இதனால் நடப்பவை உங்களுக்கு தெரிந்ததே.

       தனியார் கல்வி நிலையங்களில் வேலியே பயிரை மேயும் சந்தர்ப்பங்கள் நிறையவே நடக்கின்றன மாணவியையே காதலித்துத் திருமணம் செய்து பிரச்சினைப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதை விட மாணவிகளை அலங்கோல படுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன. மாணவர்களை தப்பு செய்ய துண்டும், சந்தர்பம் வழங்கும் இடமாகவே இது மாறி உள்ளது உள்ளது.

பேருந்து, மினி பஸ்

      பேருந்து, மினி பஸ் என்பனவும் காதல் நடக்கும் இடமாகவும், பேருந்து நிலையங்கள் பள்ளி அறைகளாகவும் மாறிவிட்டன. கல்லுரி நிறுவனங்களை விட இங்கேயே மாணவர்கள் அதிக நேரங்களை செலவழிக்கிறார்கள். அதுபோல் பேருந்து, மினிபஸ் நடத்து நர்கள் மீதும் இந்தக் குற்றங்கள் சுமத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் காதல்படும் பாட்டை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பேருந்தின் இருக்கைகளில் பின்பக்கம் பெரும்பாலும் கைத்தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்படாமல் இருப்பதேயில்லை.

      பேருந்துக்குள் நிற்கும் சில இளைஞர்யுவதிகள் பயணச் சிட்டைகளையும் நாணயத் தாள்களையும் காதலைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகமாகவே  கையாளுகின்றனர்.  இந்தத் தொடர்புகளால் உருவாகும் பிணைப்பின் உச்சத்தில் இளைஞர்களும் யுவதிகளும் நடந்து கொள்ளும் முறைகள் பஸ்ஸினுள் பயணிப்பவர்களைக் கூடக் கண் முடும் அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது.

    பல்கலைக்கழகம் முதல் பற்றை வரை காதலின் கலைக்களஞ்சியமாக மாறிவிட்டது போலவே காட்சியளிக்கிறது. சாதாரண தர மாணவர் தொடக்கம் முதுநிலை விரிவுரையாளர்கள்வரை புரியும் லீலைகள் யாழ்ப்பாணத்து மக்கள் அறியாத செய்தியல்ல. வெறும் பொழுது போக்குக்காகவும், சில மணி நேர  சுகங்களுக்காகவும் காதல் வயப்படுகின்றனர்.

      ஆனாலும் அனைத்து சூழலிலும், தமிழ்ச் சமூகத்திலும் கற்பு என்பது பிரதான ஒழுக்கப்பண்பாகவே பேசப்படுகிறது. காதல் என்பது ஓர் உணர்வு. அது தவறாகப் பேசுவதற்கு தப்பானது இல்லை. சமூகப் பெறுமதியையும் அதன் உயர்தரமான பண்பாட்டையும் கவனத்திலெடுத்து காதலைக் காதலிக்க வேண்டும். இல்லையேல் அநாதைச் சிசுக்களின் எண்ணிக்கையும் தந்தை தெரியாத பிள்ளைகளுடன் இளம் தாய்மார்களது எண்ணிக்கையும் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்... பிற்காலங்களில் எமது யாழ்பாணமும் அனாதையாகிவிடும். எனவே நம் விரைந்து செயற்படுவோம். தப்பான காதல்களை கருவறுப்போம்.

தமிழ்நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

 1. உங்கள் விமர்சனங்கள் எங்களுக்கு தேவையானது.

  ReplyDelete
 2. எமது கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள் Please...

  ReplyDelete
 3. அன்புடன் சுமி8:44:00 pm

  ஒரு நாளில் கனவு நனவாகும்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா