Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

April 1 முட்டாள்கள் தின அனுபவம்

2 comments

முட்டாள்கள் தினம் ஒவொரு வருடமும் வரும் இளைஞர் யுவதிகளின் கொண்டாட நாளாகும். ஏன் முதியவர்களுக்கும் கூட.. பல பல வேடிக்கைகள் நடக்கும் தருணம் அது. பலருக்கும் பழகிப்போன விடயங்கள் தான். "ஏமாற்றுதல் ஏமாறுதல்"  படலங்கள் தான். எவை முற்றி பகிடிவதைகள் ஆகி விட்டன. 

பாடசாலை பிள்ளைகளுக்கு சாயங்கள் ஊற்றுதல், பழுதான முட்டைகள், தக்காளி கொண்டு தாக்குதல் போன்றனவும் அரங்கேறும். உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

இணையத்தில் திரட்டப்பட்ட  தகவல் 

அந்த வகையில் 2011 APRIL 01 மறக்க முடியாத ஒரு நாள் ஆகும்.


அதிகாலை நான் நித்திரையால் எழும்பும் முதல் தொலை பேசி, அழைத்தவர் ஒரு அண்ணா, கடை ஒன்று வைத்துள்ளார், ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் அவரது கடையில் கழிப்பது வழமை. 

"உனக்கு ஒன்று தெரியுமோ..?" என தொடக்கி, தொடர்ச்சியாக தகவல்களை சொன்னார். அவை இவைதான். அண்மையில் அமைக்க பட்ட சங்குப்பிட்டி பாலம் உடைந்துள்ளதகவும். அனைத்து இணையம் மற்றும் வானொலிகளிலும் கூறப்பட்டதாகவும், அதை அமைத்த நிறுவனம் ஐம்பது ஆண்டு காலம் உத்தரவாதம் வழங்கியதாகவும், ஆனால் உடைந்ததால் அந்த நிறுவனம் மேல் வழக்கு பதிய பட்டுள்ளதாகவும் சொன்னார்.

உண்மையில் ஏப்ரல் 01 என்பது எனக்கு நினைவில் இல்லை. அத்துடன் ஏதும் பண மோசடி இடம்பெற்றதனால் ஏதும் தவறு நடந்திருக்குமோ என்று எனக்கு முன்பு தொடக்கம் ஒரு சந்தேகம் இருந்தது. அதனால் நம்பி நான் தேடாத இணையமே இல்லை. எங்கும் அந்த தகவல் இல்லை.

காலை 06.05 கு ஏமாற்றப்பட்டும் அதை 07.11 வரை உணரவில்லை. அதுவரை தேடாத இடம் இல்லை. இறுதியில் அவராகவே இது பொய் "april fool " என்றார். அப்பது தான் எமர்ரப்பட்டத்தை உணர்ந்து கொண்டேன்.

நான் ஏமாற்றியவர் 

நானும் ஒருவரை எமாற்ற வேண்டும் என்று நினைத்தேன். தேர்ந்தெடுத்தது. எனது நண்பன் ஒருவனை. உயர் தரத்தில் கல்வி கற்கும் போது எல்லோர் மாரியும் நல்ல நண்பனாக இருந்தான். பரீட்சையில் சித்தி அடைந்து ஒரு பொறியியலாளராக பல்கலைகழகத்து தெரிவாகியும் எந்தவித தலை கனமும் இல்லாமல் என்னுடன் சகஜமாக பழகும் ஒருவனாக இருந்தான். 

அப்போது அவன் கொழும்பு இல் தான் இருந்தான். 7.28 மணி அளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு "டேய் உங்க இடத்தில குண்டு வெடிச்சத்தம் உண்மையா?" என்று ஆரம்பித்தேன். தான் இப்போதான் நித்திரையால் எழும்புவதாகவும், வெளியில் போய் விசாரித்து விட்டு சொல்லுவதாகவும் கூறி அவசரமாக வைத்து விட்டான். 

எனக்கு நல்ல சந்தோசம். நானும் ஒருவனை ஏமாற்றிய சந்தோசம் தான்... ஆனால் அது சிறிது நேரம் தான் 8 .05 மணி அளவில் ஒரு குறும் தகவல், "today april fool enna?" நான் ஒரு மணி நேரம் ஏமாந்தேன், ஆனால் அண்ணளவாக 30 நிமிடங்களே எமாற்ற முடிந்தது.

இவ்வாறு பலரும் ஏமாந்திருப்பார்கள், ஏமாற்றியிருப்பார்கள். ஏமாந்தோருக்கு எனது அனுதாபங்கள். ஏமாற்றியோருக்கு வாழ்த்துகள்.

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. Anonymous8:04:00 pm

    super theesa emanthathu...heehehheh

    ReplyDelete
  2. Anonymous8:58:00 pm

    உங்கள் அனுபவம் சிறப்பானது

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா