Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அன்னையர் தினம்

5 comments
'அம்மா'  என்பது உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வான ஒன்றாகும். அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது. எதை வேண்டுமானாலும் இரண்டாக வைத்துக்கொள்ளலாம், அம்மா என்பது ஒன்றே.
அந்த உத்தம உறவின் தியாகங்களை நினைவு கூற உலக நாடுகள் எங்கும்  அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் எந்த நாட்டிலும் ஒரு குழந்தை பிறப்பது ஒரு தாய் மூலமே. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே.  சுயநலம் பாராத, தன் நலம் கருதாத ஒரு உயிர் அம்மா மட்டுமே.


அந்தத் தாயன்பை ஒருகணம் உள்ளத்தில் எண்ணிப்பார்க்க உருவாக்கப்பட்டதே அன்னையர் தினமாகும். மேற்குலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டதெனினும் அன்னையின் அன்பை எம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாள். எமது தாய்க்குலத்தை ஒரு நாளாவது நினைப்பது என்பது பொருள் அல்ல, ஒவொரு நாளும் அவள் சேவை செய்கின்றாள், எனவே ஒவொரு நாளும் நினைத்தாலும் அது ஈடாகாது. தூய்மையான அன்பின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

அன்னையர் தினம் தோன்றிய வரலாறு 


அமெரிக்காவில் வாழ்ந்த அன்னா "மரியா ஜார்விஸ்" என்ற பெண்மணியின் தாயன்பை அடியொற்றி அன்னையர் தினம் கொண்டாடப்படுவதாக பொதுவாகக் கூறப்படுகிறது. எனினும் பண்டைய காலத்தில் பெண் தெய்வங்களை விசேடமாக வழிபடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுவதாகவும் மாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருசில நாடுகளில் அன்னையர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் பொதுவாக ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது.


அம்மா என்னும் சொல்

தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதை இங்கே காணலாம்.

தமிழ்ச் சொற்கள் பெரும்பாழும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன.கூ கூஎன்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு , கர் கர் என உறுமிய கரடி, சர சர வென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும் சிரிப்பதுமாக வாயை மூடி மூடித்,திறக்கின்றது.குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது.வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.

அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம ,அம்மு ,அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள்.தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள்.

ஆய் ,தாய் ,அன்னை ,அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே.அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம்.

மானுட வாழ்வில் அன்பின் முதல் வெளிப்பாடாகக் கருதப்படும் தாயன்பு வாழ்வின் அந்தம் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம். இந்நிலையில் அன்னையருக்காக ஒருதினத்தை ஒதுக்குவதென்பது சிரமமான காரியமே.

கீழைத்தேய நாடுகளில் தாயைப் பிரிந்துவாழாத நிலையே பொதுவாகக் காணப்படுவதால் அன்னையர் தினம் பற்றிப் பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் எமது நாட்டினை எடுத்து கொண்டால். அநாதை இல்லம், முதியோர் இல்லம் என்று பெருகிய வண்ணமே உள்ளது. அங்கு தாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பிள்ளைகளால் வெறுக்க பட்ட தாய்கள், பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள தாய்கள், பிள்ளைகளே இல்லாத தாய்கள், என எல்லோரும் அங்கு தான் தஞ்சம் புகுகின்றார்கள். காரணம் பிள்ளைகள் தான். நாகரிக வளர்ச்சி, கெளரவம், மூன்றாம் நபர் ஒருவரின் பேச்சினை கேட்டு, சுயநலம்.. போன்றன பலவுள் சிலவாகும்

எனினும் எம்மை இவ்வுலகுக்கு ஈன்றெடுத்த தாய்க்காக அந்த அன்பை உணர்வதற்காக ஒருநாளை பிரத்தியேகப்படுத்துவதில் தவறில்லை என்றே கூற முடியும். பெண்ணின் அதியுயர் நிலையாக மதிப்பிடப்படும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்து அன்பான அந்த உறவுக்காக அன்பைப் பகிர்வோம். இன் நாளில் ஆவது அந்த அன்பை முழுமையாக அடைந்து. முதியோர் இல்ல எண்ணிக்கைகளை குறைப்போம்.

பிள்ளைகளே நீங்கள் இருக்கும் வரை அவர்கள் ஆனதை இல்லை. ஆனால் நீங்கள் அவர்களை ஏன் அங்கெ விடுகின்றீர்கள். உங்கள் கூடவே வைத்திருங்கள். தாய் அன்பு வேண்டும் பிள்ளைகளே....!! முதியோர் இல்லத்தில் அவர்களை தத்து எடுங்கள்.. சந்தோசமாக வாழுங்கள்...

அம்மா உலகின் அடையாளம்....


தன் உயிரால் எனை உருவாக்கிய என் அம்மாவுக்கும்...
உலகத்தில் உள்ள எல்லா அம்மக்களுக்கும்..
இது சமர்ப்பணம் ....

அம்மா உன் காதலால்
நான் விதையானேன்,
தாயே உன் பாசத்தால்
நான் மரமானேன்....!!

உன் உணர்வால் என்னை
உயிராக்கினாய்,
உன் இரத்தத்தை என்
உணவாக்கினாய்,
உன் பாசத்தால் என்னை
உருவாக்கினாய்,
உன் கண்டிப்பால் எமை
உயர்வாக்கினாய்....!!!

எனை பெற்றதால் நீ
தாய் ஆனாய்...!!
நான் உறங்க நீ
தாலாட்டானாய்...!!
துவண்ட போது நீ
தோழி ஆனாய்...!!
சந்தோசத்தில் நீ
தங்கையானாய்...!!
நோயின் போது நீ
தாதியானாய்...!!
பல நேரம் என்
தாய் ஆனாய்... நீ
சில நேரம் என்
மகள் ஆனாய்....!!

உன்னால் நான்
சிலை ஆனேன்,
உன் அன்பால்,
மகன் ஆனேன்....!!
நீ இல்லை என்றால்
என்னாவேன்...???
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

 1. ஒரு பொண்ணை பார்த்தவுடன்
  நீ நேசிக்கின்றாய்..
  இங்கு உன்னை பார்க்காமலே
  நேசித்தவள் அம்மா.. அவளை
  நேசிக்க மறந்து விடாதே மனிதா...!!

  ReplyDelete
 2. Anonymous7:07:00 am

  nice da

  ReplyDelete
 3. Ramanan INDIA7:19:00 pm

  உன்னை பார்க்காமலே
  நேசித்தவள் அம்மா.. nice

  ReplyDelete
 4. தெய்வம் தந்த தெய்வம்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா