Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

தாட்சாயணி (பிரேமினி )

4 comments

தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.
பெண் பற்றிய சித்திரிப்பினை இவை நோக்க முயல்கின்றது.எனினும் நுண்மையாக நோக்கும் பொருட்டு பெண் பற்றிய கதைகள் மாத்திரம் இங்கு கருத்திற் கொள்ளப்படுகின்றன. தாட்சாயணியின் கதைகளானது 90 களின் பின்னர் மக்கள் எதிர்கொண்ட போர்க்கால வாழ்வின் நெருக்கடிகளைப் பதிவு செய்கின்றன. 

தாட்சாயணி இலங்கையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி. பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர். இவர் ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர். இப்பொது உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றுகிறார்.

யுத்தச்சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். இவரது கவிதை ஒன்று 1993இல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் பிரசுரமாகி பலரது கவனத்தையும் பெற்றது. ஒரு மரணமும் சில மனிதர்களும் சிறுகதைத் தொகுப்பு 2004 - ஞானம் விருது பெற்றது.

இவரது நூல்கள்

ஒரு மரணமும் சில மனிதர்களும் - சிறுகதைத் தொகுப்பு (2004)
12 சிறுகதை களை உள்ளடக்கிய தொகுப்பு நூலாகும்.

அட்டைப்பட ஓவியம் - சாய்
லேசர் வடிவமைப்பு தங்க.காமராஜ்

அச்சிட்டோர் - B.V.Rஆப்செட்
பதிப்பு அனுசரணை - ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை


"எழுத வேண்டும் என்று துறுதுறுத்த வயதில் எழுத ஆரம்பித்துஇஇன்று வரை எழுதப்பட்ட சிறுகதைகளில் தெரிந்தெடுத்த பன்னிரு கதைகளின் தொகுப்பு இது.இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் எம்மால் கடந்துவரப்பட்ட காலத்தின் ஒவ்வொரு பிரதி பலிப்புக்களாகவே எஞ்சி நிற்கின்றன"

என்ற நூலாசிரியரின் "என்னுரை" வாசகர்களை உள்ளே இழுக்கிறது..

போரின் காரணமாக மக்களின் வாழ்வு, அதனால் அவர்கள் உடல் உளரீதியாக எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதனை இவரின் அதிகமான சிறுகதைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் பகுதியாக பெண் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் தாட்சாயணி அவர்கள் மிக நுண்மையாகப் பதிவு செய்துள்ளார். பத்து வயதுச் சிறுமி முதல் பாட்டி வரை பெண்கள் என்ற நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளைப் பேசும் பாத்திரங்களாகவே  அவர்களை உலாவ விடுகின்றார்.

இளவேனில் மீண்டும் வரும் - சிறுகதைத் தொகுப்பு (2007)
12 சிறுகதை களை உள்ளடக்கிய தொகுப்பு நூலாகும்.

வகை - சிறுகதை 
விலை - 250/-
அச்சிட்டோர் - ஈகுவாலிட்டி கிராபிக்ஸ் (பிரை) லிமிட் 
பதிப்பு -மீரா பதிப்பகம்.
இதற்கு அணித்துரையை செங்கை ஆழியான் க.குணராசா எழுதியுள்ளார்.


"இது எனது இரண்டாவது தொகுப்பு. முதல் தொகுப்பு வெளிவந்த  போது இருந்ததை காட்டிலும் எவ்விதத்திலும் குறைந்துவிட வில்லை இந்த பூரிப்பு.."
என்னும் போது அவரது நம்பிக்கை அதை விட இது இன்னும் வரவேற்பை பெரும் என்பது மட்டுமே..

இதைவிட என்னும் இரு தொகுதிகள் வெளியுடப்பட்டு உள்ளன.

தூரப்போகும் நாரைகள் - சிறுகதைத்தொகுப்பு

கடவுளோடு பேசுதல் -உரைநடை (சில ஆன்மீகக் குறிப்புகள்)
மீரா பதிப்பகம், 2009


அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்
சிறுகதைத்தொகுப்பு 2011 பங்குனி
16 சிறுகதைகளை உள்ளடக்கியது.

வகை - சிறுகதை 
விலை - 300/-
அச்சிட்டோர் - தரஞ்ஜி பிரிண்ட்ஸ்
பதிப்பு -மீரா பதிப்பகம்.


சிறுகதை என்பது வாழ்வினுடனான மனித மனம் கொள்ளும் உராய்வினால் ஏற்படும் ஒரு கீற்று வெளிச்சம் பற்றிய பதிவு. அந்த கீற்று வெளிச்சத்தில் தெரியும் ஒரு புதிய நிஜம்தான் சிறுகதையை சாத்தியமாக்குகிறது. வாழ்க்கையும் சரி, மனித மனமும் சரி, அனுபவத்தால், வாழ்விடத்தால் , காலத்தால் மாறுபட்டிருக்கின்றன. இந்த இரண்டின் வெவ்வேறு விகிதாச்சார அளவிலான உராய்வு, இதனுடன் கதையைச் சொல்பவனின் ஆளுமையும் சேரும்போது, கதையின் செய்தியிலும் உருவத்திலும் எண்ணிறந்த சாத்தியப்பாடுகள் உருவாகின்றன.

இவரது படைப்புகள் மிகவும் அருமையானவை என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆரம்ப காலங்களில் நான் இவரிடம் கல்வி கற்றிருக்கிறேன். (2001 ) அந்தவகையில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது..

இவ்வாறாக தாட்சாயணி பெண் சார்ந்த கதைகளில் பெண்கள் இந்தச் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற அடக்குமுறைகளையும் துயரங்களையும் யதார்த்தமாகச் சித்திரிக்கின்றார். இவற்றை ஒரு பெண் படைப்பாளியாலேயே பதிவு செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கதைகள் ஆதாரமாகத் திகழ்கின்றன.

தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

 1. ennum pala ullathu...

  ReplyDelete
 2. Anonymous8:41:00 am

  எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
  அவருடைய கதைகளையும், கவிதைகளையும் ஈழத்தில் இருக்கும் போது வாசித்திருக்கிறேன். பல்வேறு கதை கருக்களை நல்லவிதமாக கதைகளாக வெளிப்படுத்துவார். குறியீட்டு கதைகளாகவும் சிலவற்றை எழுதியிருந்தார்.

  ReplyDelete
 3. @Rajஆம் எனக்கு தெரிந்தவை மட்டும்

  ReplyDelete
 4. @Anonymousஉண்மைதான்இ நன்றி உங்கள் கருத்துக்களுக்கு

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா