Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பாடலாசிரியர் மதன் கார்க்கி

5 comments
மதன் கார்க்கி (பிறப்பு: 1980) 
ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர்.
லயோலா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த மதன் கார்கி 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். 

'இது ஒரு பொன் மாலைப் பொழுது’ பாடலை அப்பா வைரமுத்து எழுதிய அந்த தினத்தில்தான் பிறந்தார். இப்போது படங்களில் vasana கர்த்தாவும் ஆகிவிட்டார்.

கண்டேன் காதலை 2009 
ஓடோடி போறேன்
லாவண்யா,ரஷ்மி விஜயன்
வித்யாசாகர்

எந்திரன் 2010 
இரும்பிலே ஒரு இதயம்
ஏ.ஆர்.ரஹ்மான், காஷ் அன் க்ரிசி
ஏ.ஆர்.ரஹ்மான்

எந்திரன் 2010
பூம் பூம் ரோபோ டா
யோகி பி, கீர்த்தி சகாத்திய, ஸ்வேதா மோகன், தன்வி ஷா
ஏ.ஆர்.ரஹ்மான்

கோ 2011
என்னமோ ஏதோ
ஆலாப் ராஜு, ப்ரஷந்தினி, ஸ்ரீசரண், எம்சீ ஜெஸ்
ஹாரிஸ் ஜெயராஜ்

கோ 2011
நெற்றி பொட்டில்
நரேஷ் அய்யர்
ஹாரிஸ் ஜெயராஜ்

எங்கேயும் காதல் 2011
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
ஹரிஷ் ராகவேந்திரா
ஹாரிஸ் ஜெயராஜ்

பயணம்
180
போன்றனவும் அடங்கும் 
எந்திரன் படத்தின் பாடலாசிரியர், டெக்னிக்கல் அட்வைசர் என்று பட்டையைக் கிளப்பிய மதன் கார்க்கி, எந்திரனுக்கு சுஜாதாவும், ஷங்கரும் எழுதிய வசனங்களை மேலும் செழுமைப்படுத்தியதற்காகப் பாராட்டுக்கள் குவிந்தன.
            பூச்சியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு என்று பைனரிக்குள் பூவாசத்தை கொண்டு வந்து தமிழையும் அழகாக தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்தவர் மதன் கார்க்கி. இதற்கு  முன்னர் நா.முத்துக்குமார் எனக்கு தெரிந்த பிடித்த அறிவியல் அறிவு நிறைந்தவர்.கார்க்கியை பெரும்பாலானவர்கள் அறிந்துகொண்டதும் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற இந்த பாடல் மூலம் தான் . கண்டேன் காதலை என்ற படத்தில் வந்த அந்த முதல் பாட்டு யாருக்கும் நினைவிருக்காது . இப்போது வெளியாகி என்னை கவர்ந்த பாடல்.

பாடல் : நெஞ்சில் நெஞ்சில்
படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா
___________________

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
___________

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!

வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?

உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)
___________________

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!

ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே

விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)

சிறு  விமர்சனம் 


எந்திரனில் தன் திறனை காட்டிய மதன் கார்க்கியின் பயணம் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ விலும் தொடர்ந்தது . வரிகள் அனைத்தும் புதிது. ஏதோ இருக்கிறது வரிகளில். ஓவொன்றும் அற்புதமானவை. தமிழ் மொழி அழாகான மொழி என வெளிப்படுத்தும் எழுத்து , அவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஆச்சரியம். இதுவரை கனத்த வரிகள், தந்தையை மிஞ்சும் தமிழ். புலியின் குட்டி பூனையா?  

என் நிலாவில் என் நிலாவில் - 
ஒருமின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - 
உன்பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்


இந்த வரிகள் போதும் அழகான கவிநடையில் பாடலின் இனிமையையும் மீறாமல் இசையின் இயல்பையும் மீறாமல் இலக்கியத்தின் சாரலையும் தெளிவாக  முடிகிறது. விழிகள் பேசும் காதலின் இசை இனிமையை உரைக்கிறார் கவிஞர் . நிலாவின் ஒளியை மின்சார தூறல்கள் என்னும் உவமை அருமை. 

இசையின் மெட்டு ஓசைக்குள் சந்தத்துடன் வருகையில் மேலும் இனிமை. காதலர்களுக்கிடையேயான மௌன மொழியின் வெளிப்பாடு.ஒரு அழகு இருப்பது உணர்கிறது மனது.  உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில் அழாகாக மனதில் ஓட்டும் வரிகள். காதல் நிரம்பியவை. கற்பனை கூட வித்தியாசமானது. கனவில் வரும் நினைவுகளை, அந்த நினைவில் வரும் காதலியின் உருவத்தை, அவ்வளவு அழகாக கூறுகிறார்.


வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?


பாடலின் உள்ளே ஒரு உவமை சிற்பம், செதுக்கியவர் மதன். பார்வையை திரவமாகவும், காதல் வயப்படலை இதயப் புதரில் விழுதல் என்றும் அருமையாக கூறுகிறார். ஏனெனில் இரண்டும் இனிமையானவை. சற்றுமே சிந்தித்து பார்க்க முடியாத இந்த உவமை உருவாக்கப்பட்டு அழகாகக் குரல் வழியாக வருவது இந்த வரிகளில். மீண்டும் மீண்டும் கேட்டு வரிகளை மனப்பாடம் பண்ணிவிட்டேன்.அடுத்த சரண வரிகளில் உள்ளக் காதலில் இருந்து உடல் காதலுக்கு பாடல் வரிகள் நகர்கின்றன. காமத்துப் பாலையும் கவிதைப் பாலாக்கி கார்க்கி ரசிக்க வைக்கிறார். வைரமுத்து வழியில் அவரது வாரிசும்.. கனதியான காமம் அளவுகடந்து வெளியே வழியாமல் பட்டு உடையுடன் அழகாக அனுப்புவது இவர்களின் குடும்பக் கலை போல் தெரிகிறது. வைரமுத்துவின் பாடல்கள் அனைத்துமே.. ஒரு விதமானவை. 

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!

விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே


நிறைவாக அழகாக பெண்ணின் வேண்டுகோளை வெட்கத்துடனும் விரகத்துடனும் வினயமாக நயமாக முடித்து வைக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி. பாடல் பல இடங்களை தொட்டு போனாலும், எங்கள் எல்லோரின் இதயத்தையும் தொட்டு போக தவறவில்லை.

விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க

காதல் காரி


ஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது. இவர் படலை அனுபவித்து படக்குடியவர். ஹரிஸ் கூட்டணி மீண்டும் ஒருமுறை.. கலக்கியிருக்கிறது.

ஹரிஸ் ஜெயராஜின் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார். மென்மையான குரலும் ,குரலில் தெரியும் காதலும், அழகான தமிழும் உயிர்வரை பாடலைக் கொண்டு செல்கின்றன.சின்மயியின் குரலும் சேர்கையில் பாடலின் உணர்வும் சில இடங்களும் இனிமையான பல பாடல்களை கண் முன் நிறுத்துகின்றன பாடலை ஞாபகப்படுத்துகின்றன.

    
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

 1. Anonymous6:53:00 am

  Payanam Song V.nice... Nenjil Nenjil also V.nice....

  ReplyDelete
 2. pilikku piranthathu punaiya.....

  ReplyDelete
 3. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2241.html

  ReplyDelete
 4. நன்றி அண்ணா

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா