Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்

12 comments

இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer  (கண்டுபிடிப்பாளர்)  மற்றும் Royal academic enterpreneur ship  (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்)  ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன்

இங்கிலாந்தில் The Real Time Location System (RTLS) இது ஒரு குறைந்த செலவிலான Radio real time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை கணித துறையில் யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3A  சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான Sheffield பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியற் கல்வியை (B.Eng.Electronic Eng) 2007 ம் ஆண்டு பூர்த்தி செய்து இங்கிலாந்து ரீதியான தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தச் சாதனைக்காக இவருக்கு Sie William Siemen Medal பதக்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தனது முதுமாணிக் கல்வியை உலகளாவிய ரீதியில் திறமை வாய்ந்த இங்கிலாந்து Cambrige பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று தொடர்ந்தார். இங்கு முதலில் Master of Philosophy in Electronic Eng மற்றும் Doctor of Philosophy in Electronics Eng என்ற உயரிய படடங்களையும் பெற்றுக் கொண்டார்.பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற இவரது ஆராய்ச்சி கண்டு பிடிப்புக்கள் இங்கிலாந்து பத்திரிகைகளிலும் பல்வேறு ஆங்கில இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு Patients Inventer என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் தற்போது கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கெட் கழக தலைவராகவும் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில் நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.


இவரது கண்டு பிடிப்பான radio real time tagging system ஆனது பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இவரது கண்டுபிடிப்பான inteligent wireless passive sensor technology system விமான நிலையத்தில் பயனிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது. இவரது கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் பாதுகாப்பு சேவைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். 

ஏற்கனவே பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, Apple iphone போன்றவற்றில் பயன்பாட்டில் உள்ள போதிலும், அவை மின்கலன் இருந்தால் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. அத்துடன் அவற்றின் உற்பத்திச்செலவும் மிகவும் அதிகமாகும். 

ஆனால், Dr.சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்று கூறப்படுகிறது.

Next PostNewer Post Previous PostOlder Post Home

12 comments:

 1. best wishes.. sabeshan

  ReplyDelete
 2. தொடரட்டும் சாதனைகள்

  ReplyDelete
 3. Anonymous7:20:00 am

  தமிழா நாம் சாதிக்க பிறந்தோமடா

  ReplyDelete
 4. Anonymous5:42:00 pm

  தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்!!!
  வாழ்த்துக்கள்!!!!! தொடரட்டும் சாதனைகள்...............

  ReplyDelete
 5. @ruba

  உங்கள் வாழ்த்துகள் அவரை சென்றடையும்..நன்றி

  ReplyDelete
 6. @sure

  உங்கள் வாழ்த்துகள் அவரை சென்றடையும்..நன்றி

  ReplyDelete
 7. @Anonymous

  உங்கள் வாழ்த்துகள் அவரை சென்றடையும்..நன்றி

  ReplyDelete
 8. Anonymous6:24:00 pm

  valthukal thola

  ReplyDelete
 9. valththukal nanpaa......

  ReplyDelete
 10. @alferd valthukalukku nanri.. avarai senradayum...

  ReplyDelete
 11. தமிழனின் சாதனைகள் குறையாது...
  தொடருங்கள் அண்ணா உங்கள் தேடலை...

  ReplyDelete
 12. தமிழன் சாதனை படைக்க பிறந்தவன் .............வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா