Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

வதிரி.சி.ரவீந்திரன்

5 comments

சின்னத்தம்பி ரவீந்திரன் 


வதிரி. சி. ரவீந்திரன், வானம்பாடி, குளைக்காட்டான் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஒரு இலங்கை எழுத்தாளராவார். வ. சின்னத்தம்பி, சீ. றோசம்மா தம்பதியினரின் புதல்வராக வடமாகாணத்தைச் சேர்ந்த சாவகச்சேரியில் அக்டோபர் 25 1953  பிறந்தார்.

 ரவீந்திரன் தனது கல்வியினை யா/ சாவக்கச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின்பு யா/ வதிரி-வடக்கு மெ.மி. பாடசாலை, யா/ கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார். இவரின் மனைவி சிவராணி பிள்ளைகள் சஞ்சயன், சிவானுஜா, குபேரன், ஆதவன்

ஆரம்ப காலங்களில் காவல்துறையில் பணியாற்றிய இவர், பின்பு ரெலிகொம் நிறுவனத்தில் பணியாற்றி தற்போது கொழும்பு மாவட்ட விவாகப் பதிவாளராக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இவரின் கன்னியாக்கம் 1969ஆம் ஆண்டில் ‘பூம்பொழில்’ எனும் சஞ்சிகையில் ‘எங்கள் எதிர்காலம்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 150க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 3 சிறுகதைகளையும், 40க்கும் மேற்பட்ட நேர்காணல்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இலங்கை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளான பூம்பொழில், நான், மல்லிகை, ஞானம், ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், தினகரன், தினபதி, சிந்தாமணி, தினமுரசு, நமது ஈழநாடு, இந்திய சஞ்சிகைகளான பொறிகள்,அக்னி, சுவடுகள், ஏன் இலங்கை வானொலியில் ஒலிமஞ்சரி, வாலிபவட்டம், கலைப்பூங்கா, பாவளம், வானொலிக் கவியரங்குகள் இலங்கை ரூபவாஹினியில் உதயதரிசனம், நான்காவது பரிமாணம்.

ரவீந்திரனின் எழுத்துத்துறைப் பங்களிப்பில் இவரால் மேற்கொள்ளப்படும் நேர்காணல்கள் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றன. இலங்கையிலுள்ள கலைத்துறை, அரசியல்துறை சார்ந்த பல முக்கிய பிரமுகர்களை இவர் நேர்கண்டு எழுதியுள்ளார். குறிப்பாக இலங்கையின் பிரபல பாடகரான மொஹிதீன்பேக் அவர்கள் மரணிப்பதற்கு முன் இறுதி நேர்காணலை எழுதியவரும் இவரே.

இளைஞர் பராயத்தில் இவர் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டிருந்தார். கவிஞர் காரை. செ.சுந்தரம்பிள்ளையின்; ‘சாஸ்திரியார்’ (1968) நாடகத்திலும், இளவரசு ஆழ்வாப்பிள்ளையின் ‘காலவாவி’ நாடகத்திலும், கோவிநேசனின் ‘நவீன சித்திரபுத்திரன்’ நாடகத்திலும் நடித்துள்ளார். கலாவினோதன் பே.அண்ணாசாமியின் நாடகப் பட்டறையிலும் இணைந்து செயல்பட்டுள்ளார். இவரின் தொழில்துறை நிமித்தமாக நாடகத்துறையில் தொடர்ந்தும் ஈடுபாடுகொள்ள முடியாவிடினும்கூட தற்போது நாடக விமர்சகராக இவர் திகழ்கின்றார்

2006ஆம் ஆண்டில் தேசிய நாடகவிழாவில் நடுவர்களில் ஒருவராக இவர் பணியாற்றியுள்ளார். இலங்கைக் கலைக் கழகத்தின் தேசிய நாடகசபை உறுப்பினராக 2006ஆம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகின்றார்.நன்றி விக்கிபீடியா 

‘மீண்டு வந்த நாட்கள்’ 


கொடகே வெளியீடாக வந்துள்ள வதிரி சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி அரங்கில் மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது. 

நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி மயூரி விவேகானந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தார். வரவேற்புரையை ராஜ சிறீதரன் நிகழ்த்தினார். நிகழ்வில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரையாற்றினார். 

சிறப்பு அதிதியாக தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் திரு உபாலி லீலாரட்ன கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நிகழ்வில் வாழ்த்துரையை ஓய்வுபெற்ற அதிபர் செ.சதானந்தனும், வெளியீட்டுரையை கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும், நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும் நிகழ்த்தினர். நயப்புரைகளை சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணனும் கவிஞர் மேமன்கவியும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை ‘சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை’ திரு சிதம்பரப்பிள்ளை சிவம் பிரதம அதிதி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

 நிகழ்வில் நூலாசிரியர் வதிரி சி. ரவீந்திரன் தன் மூத்தவர்களான முன்னோடிகள் திரு சி.க.இராஜேந்திரன் அவர்களையும் திரு .குணசிங்கம் அவர்களையும் மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய ஐந்தாம் திருவிழா உபயகாரர்கள் சார்பில் முருகேசு பாக்கியராசா நூலாசிரியர் வதிரி சி. ரவீந்திரன் அவர்களை பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இன்னும் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

 1. saravanapavan7:33:00 am

  சாவகச்சேரி இல் பிறந்து ஏன் வதிரி என்று போடுறார்.

  ReplyDelete
 2. சாவகச்சேரி நான்பிறந்த இடம்.என்னை வளர்த்தது வதிரியாகும்.
  வதிரி "தமிழ்மன்றம்"என் இலக்கிய செயற்பாட்டிற்குவழியமைத்து
  தந்தது.

  வதிரி.சி.ரவீந்திரன்.

  ReplyDelete
 3. Anonymous7:02:00 am

  நீங்கள் உருவானது சாவகச்சேரி தானே

  ReplyDelete
 4. உருவாகலாம்.என்னைமனிதனாக இலக்கியகாரனாக உருவாக்கியது வதிரிதான்.
  என் தாயின் ஊரும் வதிரி.நன்றி.கேள்விகளை சொந்தப்பெயரில் அல்லது வேறு
  பெயர்களில்கேளுங்கள்.பெயர் இல்லாதுஅனாமோதயமாக கேட்பது அழகல்ல.
  Vathiri S.Raveendran.

  ReplyDelete
 5. Anonymous1:17:00 pm

  congratz both of you.
  Vetha.Elangathilakam-

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா