Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சங்கிலியன்...!

3 comments


அதிகமா பதிவுகள் போட வேண்டும் என்று ஆவல். என்ன போடுவது. எதோ ஒன்றை போடுறன்.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்து இருந்த சங்கிலியன் சிலைக்குப் பதிலாக மறு சீரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை 2011/08/03 அன்று காலை 7 மணிக்கு
அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வினால் திறந்து வைக்கபட்டது. ஆரம்பத்தில் அது முற்றாக அழிக்கபட்டு விட்டது என எதிர்ப்புகள் கிளம்பியதால். மீண்டும் அமைக்கப்பட்டது. மீள் புனரமைப்பில் வாழ் கீழ் இறங்கிய சரணடையும் சிலை என ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மீள அமைக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் ,பேரசிரியர் ,புஸ்பரத்தினம் ,பாராளுமன்ற உறுபினர்களும் கலந்து கொண்டனர். மற்றும் மத தலைவர்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தனர்.

சங்கிலியன் பற்றி 

சங்கிலியன் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். 

இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக  இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.


1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான். சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். 

போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

சங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கலகம் செய்து சங்கிலியை அகற்றிவிட்டு அவனது மகனான புவிராச பண்டாரத்தை அரசனாக்கினர் என்றும், புவிராசன் ஆண்மையற்றவனாய் இருந்தமையால் சங்கிலியே ஆட்சியை நடத்தி வந்தான் எனவும் செ. இராசநாயகம் கூறுகிறார். இவரது கூற்றுப்படி சங்கிலி 1565 ஆம் ஆண்டு காலமானான்.  

அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

 1. Anonymous9:19:00 pm

  vala piranthavan sangiliyan

  ReplyDelete
 2. saravanapavan9:20:00 pm

  thamila..... un aaanai....

  ReplyDelete
 3. சங்கிலிய மன்னனை பெருமைப்படுத்தி சிலை வைத்தவர் அல்பிரட் துரையப்பா. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தவர். அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் யாழ் மாநகர முதல்வராக இருந்த காலத்தில், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பிரபல சிற்பியான சிவப்பிரகாசம் அவர்களால் சங்கிலிய மன்னன் சிலை வடிவமைத்து ஸ்தாபிக்கப்பட்டது.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா