Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

உதயமாகுமா உதயசூரியன் கிராமம்?

12 comments

இணைய தளங்களில் இப்போது உதய சூரியன் கிராமம் பற்றி பிரபலமாக போடப்படுகின்றது. தலையங்கங்கள் விமர்சனமாக இருக்கின்றன. விமர்சனங்கள் விசித்திரமான உண்மைகளாக இருக்கின்றன மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் - ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்
இந்த தலையங்கங்கள் தான் இப்போது இணையத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

எமது அயல் கிராமம் என்ற படியாலும், உண்மையிலே இதை, இந்த கிராமத்தை ஒரு முன் மாதிரியான கிராமமாகவும் மாற்ற வேண்டி இருக்கும் கட்டாயமும் இருப்பதாலும் இதை பதிவாக இடுகிறேன்.

நான் அறிந்த தகவல்களுடன், இணையத்தில் இருந்தும் சேகரித்தவற்றை தொகுத்துள்ளேன்.

பெயரளவில் மட்டும் உதய சூரியன் என்னும் பெயரினை கொண்டு அன்று தொட்டு இன்று வரை வெளிச்சமில்லாமல் அந்த கிராமம் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மீளமுடியாத ஒரு இன்னலை அனுபவித்துக்கொண்டு இருக்கிறது.

அரசாங்ஙத்திற்கு சொந்தமாக இருக்கும் இக் கிராமத்தின் காணிகள் மக்களின் பெயருக்கு இன்னமும் மாற்றப்படவில்லை.பலவருடங்களுக்கு மேலாக மிகுந்த கஸ்ரத்தின் மத்தியில் வாழும் இவர்கள் காலநிலை மாற்றங்களையும் தங்கிக் கொண்டு தான் வாழவேண்டி இருக்கிறது.

இந்த கிராமம் இன்னும் கவனிக்கப்படதல் இருப்பது வேதனைக்குரியது. மட்டும் இன்றி ஆச்சரியத்திற்கும் உரியது.

யாழ்ப்பாணத்தில் குழைக்காடு என செல்லமாக அழைக்கப்படும் தென்மராட்சி சாவகச்சேரியில், நகரத்து பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் கச்சாய் செல்லும் வீதியில் அமைந்துள்ள ஒரு இருண்ட கிராமமே உதயசூரியன் கிராமம். தென்மராட்சியில் J/301ல் கோயில் குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு பகுதியான கிராமமே இது. 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்த உதயசூரியன் கிராமமானது கச்சாய் கடலை அண்மித்ததாகவும் பரந்த அளவும் உடையது.

இங்கு வாழும் அதிகமானவர்கள் நகர சபையில் தான் வேலை செய்கிறார்கள். சுகாதார தொழிலாளர்களான இவர்கள் காலை சென்றால் மதியம் அல்லது மாலையில் தான். அதன் பிறகு வேறு வேலைகள் செய்கிறார்கள்.  இங்கு பெண்களும் நகரசபையில் சுகாதார தொழிலாளர்களாகவும் , சந்தையில் மரக்கறி வியாபாரிகளாகவும், மீன்சந்தையில் ஆண்கள் மீன் விற்பவர்களாகவும், பெண்கள் மீன் வெட்டி குடுத்தும் சம்பாதிக்கிறார்கள்.

பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்பது அவர்களது கட்டாயம், அப்போது தான் குடும்பம் சுமையின்றி போகும். இதுக்கு பல காரணங்கள், உதாரணத்திற்கு இவர்களில் பலர் வங்கியில் கடன் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் அதிகம் இலங்கை வங்கியையே நாடி தம் அவசர தேவைகளுக்கும், தொழில் மேம்பாட்டுக்கும் கடன்கள் பெறுகின்றார்கள். இது 15000/- முதல் 25000/-, 50000/-, 95000/- 150000/-, 200000/- வரை நீள்கிறது. இதற்கு மாதாந்தம் தவணைப்பணம் செலுத்த ஆண்/பெண் ஒருவரின் சம்பளம் தேவை.


இதைவிட ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால் சராசரி 4 அல்லது 5 பிள்ளைகள் இருப்பார்கள்.மேலும் இளவயதுத் திருமணங்களும் பலதாரமணங்களும், மதுபாவனை அதிகம் இவ்வாறான சூழலில் அதிகாமாகவே உள்ளது.

இந்த சூழலில் பிறந்து வளர்வவர்கள் பெரும்பாலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்.  இங்கு பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு போட யாரும் இருக்கார்கள். இவர்கள் தம் பாடு, பாடசாலை செல்லும் எண்ணம் அறவே இருக்காது. எதிர்காலம் குறித்த எண்ணம் இவர்களிடம் இல்லை. தம் குழந்தைகலும் கல்வியில் பெரியவர்களாக வேண்டும் அவர்கள் பெரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நினைப்பு பெற்றோரிடமும் இல்லை. 

அதை விட நகர சபையில் ஓய்வூதியத்துடன் வேலை அப்பா எடுத்து தருவார் அல்லது கிடைக்கும் என்ற நம்பிக்கை, இதுவே பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் சிறுவர்களிடம் தொன்றமைக்கு காரணம்.

கூலித் தொழில் புரியலாம், கடற்தொழிலுக்கு செல்லலாம் என்ற எண்ணத்தை முன்பே ஏற்படுத்திவிடுகிறார்கள். பாடசாலை செல்லும் நேரம் தாங்கள் உழைக்கலாம் என்ற சிந்தையே அங்கே மேலோங்குகிறது. இதனால் இங்கேயும் குழந்தை தொழிலாளர்கள் உருவாகிறார்கள்.

இருப்பினும் சில பிள்ளைகள் கல்வியையும் தொடர ஆசைப்படுகிறார்கள், இவர்களுக்கு பெரிய சில பாடசாலைகள் அனுமதி தர முன்வராதபோதும் டிறிபேர்க் கல்லூரி, சக்தி அம்மன் பாடசாலை மற்றும் றோமன் கத்தோலிக்க பாடசாலை போன்றன நேசக்கரம் நீட்ட தவறவில்லை. 

இதை விட ஏனைய குழந்தைகளுக்கு கட்டாயக் கல்விக்காக குழு ஒன்று செயற்படுவதாகவும், அக்குழுவினர் இக்கிராமத்தில் உள்ள பள்ளி செல்லாத பிள்ளைகளை கண்டறிந்து கட்டாயக் கல்வியை பெற வழி செய்வதாகவும் அறிய முடிகிறது. வசதியற்ற பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியும், உணவு போசாக்கு என்பவற்றையும் அவர்கள் வழங்க முன்வருகின்றார்கள்.

தென்மராட்சிப் பகுதியில் கையெழுத்திடத் தெரியாத ஒரு இளம் சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலை வேதனைக்குரிய விடயமே...
என ஒரு பத்திரிகையில் படிக்க முடிந்தது. இந்த நிலை எனக்கும் வேதனைக்குரிய ஒன்றாகவே தோன்றியது. இது ஒரு வெக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். 

இந்த நிலை மாற வேண்டும். பாரா முகமாக இருக்கும் இந்த கிராமம் ஒளி பெறவேண்டும்.. இங்கு உள்ள புத்திஜீவிகள், சமூகங்கள் கண்களை திறக்கவேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குக்கு வரும் பெரியோர்களும் இது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்....நகரசபை, அரசு இவர்களை இந்த கிராமத்தை ஒரு முன் மாதிரி கிராமமாக அறிவித்து அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த சூரியனை அஸ்தமிக்க விடாது ஒளிர வைக்க வேண்டியது அனைவரின் கடமையுமாகும்....

நன்றி
அன்புடன் sanjay தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

12 comments:

 1. Anonymous10:33:00 pm

  50 வருஷம் செய்யாதத இனியா?

  ReplyDelete
 2. சொல்லமுடியாது...நடக்கலாம்..

  ReplyDelete
 3. Anonymous10:36:00 pm

  குறஞ்சது நகர சபையாவது கண்டு கொண்டுதா? இல்லையே
  வேலை வாங்க மட்டும் தானே அவங்க..

  ReplyDelete
 4. இப்பதானே எல்லாம் மாறி இருக்கு, புது நிர்வாகம்..கட்டாயம் செய்யும்..நம்பிக்கை வையுங்கள்....FRIEND

  ReplyDelete
 5. இப்படி ஒரு கிராமம், எமது பிரதேசத்திலா??? நம்ப முடிய வில்லை அண்ணா

  ReplyDelete
 6. என்ன செய்வது தங்கை.. எல்லோரும் முடிந்தால் முடியும்.

  ReplyDelete
 7. உதயசூரியன் கிராம நிலையை வெளிக்கொணர்ந்தமை பாராட்டுக்குரிய விடயம்
  தங்கள் பணி தொடரட்டும்

  ReplyDelete
 8. நன்றி அண்ணா...

  ReplyDelete
 9. Suba U.K8:56:00 pm

  அன்றில் இருந்து இன்று வரை மீளாத ஊர் ..
  அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு என் பாராட்டுகள்

  உங்கள் பணி தொடரட்டும்

  ReplyDelete
 10. மிக்க நன்றிகள்...

  ReplyDelete
 11. நல்ல விசஜம் இது தொடரனும் ..........

  ReplyDelete
 12. @piriமிக்க நன்றிகள்...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா