Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சாதிகள் இல்லையடி பாப்பா....!

5 comments

"சாதிகள் இல்லையடி பாப்பா! அது அப்போ....!! சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ..."

சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக  இட்டதன் காரணம் சாதிகளின் பெயரைச் சொல்லி மற்றவர்களை இழிவுபடுத்தவோ அல்லது கீழ்மைப்படுத்தவோ அல்ல.
உண்மையில் சாதிகள் என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றியது? என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே. இன்றும் பலர் சாதிகளின் பெயர்களைச் சொல்லி பலவற்றை செய்வதை காண்கிறோம். 

இது சரியா? 

இனி வரும் சந்ததியினரும் இதைத் தொடர வேண்டுமா? 

இது தான் இந்த ஆராய்வு...!!

நகர மயமாக்கம்

சாதி என்பது தொழில், பொருளாதார வசதி, இனம், போன்றவற்றின் அடிப்படையிலான சமூக தரப்படுத்தல்கள் ஆகும். சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள் என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில் சாதியின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
 1. மரபுக் கோட்பாடு (traditional theory)
 2. தொழிற் கோட்பாடு (occupational theory)
 3. சமயக் கோட்பாடு (religious theory)
 4. அரசியற் கோட்பாடு (political theory)
 5. இனக் கோட்பாடு (racial theory)
 6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)
ஆறாவது தான் சரி என்பது எனது பார்வையில். மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக தான் வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான். ஆரம்ப காலத்தில் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே வேலைகளை இலகுவாக செய்வதற்கு கூட்டம் கூட்டமாகவும்,  குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர். இது நகர மயமாக்கம் எனப்படுகிறது. இந்த  குழுக்கள்  பின்னர் சமூகங்களாக மாறின. 

சமூகங்கள் ஏற்றபட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே சாதிகள் அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை அல்ல அதாவது அவன் செய்யும் தொழில் மாறுபட்டால் அவன் சாதியும் மாறும். உத்தரனத்திர்ற்கு ஒருவன் முடிவெட்டும் தொழில் செய்தால் அவனை அம்பட்டன் என்பர். அவன் அத்தொழிலை விட்டு வேறு தொழிலில் ஈடுபட்டால் அதாவது தச்சு வேலை செய்பவனாக மாறினால் அவனை தச்சன் என்றுதான் கூறுவர்.

ஆனால் இன்று சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒருவர் என்ன தொழில் செய்தாலும் சாதி மாறாத் தன்மையுடன் திகழ்கின்றது. கீழ்மை படுத்தப்பட்ட ஒரு மனிதன் ஆசிரியரானாலும் அவரை கீழ் சாதியினராகவே அணுகிறார்கள்.

யாழ்ப்பணத்தில் சாதிகள்

"அம்பட்டர், இடையர், கடையர், கரையார், கன்னார், கள்வர், குயவர், குறவர், கைக்கோளர், கொல்லர், கொத்தர், கோவியர், சக்கிலியர், சான்றார், சிவியார், செட்டியார், சேணியர், தச்சர், தட்டார், தவசிகள், திமிலர், துரும்பர், நளவர், பரதேசிகன், பரம்பர், பரவர், பள்ளர், பறையர், பாணர், பிராமணர், மடைப்பள்ளியர், மறவர், முக்கியர், வண்ணார், வேளாளர், யாதவர்"

என்னங்க தெரியலையா இது தானாம் யாழ்ப்பாணத்து சாதிகள். தேடி அறிந்தவை சில,  அப்ப இங்க மனித ஜாதியே இல்லையா ???  இது என் கேள்வி..

இலங்கையில் பாடசாலைக் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, பாரளுமன்ற ஆசன ஒதுக்கீடு போன்ற வற்றுக்கு சாதி சார்பான ஒதுக்கீடுகள் கிடையாது. திருமணச் சட்டங்களிலும் சாதி இடம்பெறவில்லை. எனினும் திருமண பேச்சுகளில் சாதி முக்கியமான ஒன்றாகும். 


எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும் ..??

01 .வேத மகரிஷிகள் பலர் இன்று தாழ்த்தப்பட்டதாக கருதப்படும் குலங்களில் வந்தவர்களே ஆவர். உதாரணமாக மீமாம்ச பாஷ்யம் எழுதிய சாபர மகரிஷி வேடரின் மகனாவார். இன்று சாபரர் எனும் குலம் தாழ்த்தப்பட்ட குலமாகும். சாபர பாஷ்யம் இந்து தத்துவ ஆன்மிக உலகின் அரும்பெரும் பொக்கிஷமாக விளங்கும் போது அந்த மகரிஷியின் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டிருப்பது எவ்வாறாக கருதப்பட வேண்டும்..? 

02 .விவசாயிகள் சேத்தில் கால் வைத்தால் தான் நாம் யாரும் சோத்தில் கை வைக்க முடியும். சாதிகள் என்று சொல்லிக்கொண்டு நாம் விதைக்க போனால் வைத்தியம் யார் பார்ப்பார். கட்டடம் யார் கட்டுவார், வங்கிகள், பாடசாலைகள் எப்படி...??? எம்மால் மீன் பிடிக்க கடலுக்கு இறங்க முடியுமா???

03 .ஒரு மனிதனது வேயர்வையோ அல்லது, எதாவது கழிவுகளோ இந்த மண்ணில் விழ தானே வேண்டும், அது மழையாகி கடலை சேரலாம்.. அங்கு உருவாகும் உப்பை தானே உணவில் சேர்க்க வேண்ண்டும். அதில் அவன் வியர்வை அன்று உப்பை கழுவி பயன்படுத்த முடியுமா? ஒரு விபத்தில் அகப்படும் உங்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. இரத்த வங்கியில் சாதியடிப்படையில் பிரித்து வைத்துள்ளார்களா..?

04 . எத்தனையோ சாதனையாளர்கள், எத்தனையோ அதிகாரிகள், நாட்டின் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களை ஆளவில்லையா..?? நீங்கள் உதவிகேக்கவில்லையா..?? ஒருவர் ஒருவாய் சார்ந்தே வாழ்கிறோம்..இதை மறுக்க முடியுமா?? சுவாசிக்கும் காற்று கூட பிரித்து உள்ளதா...???

இன்னும் எத்தனையை உதாரணமாக்கலாம்...

சமூத்துக்கு...


தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் பரம்பரை அலகு மிக  முக்கியமாக நோக்கப்படுகின்றது. நாம் ஒரு வட்டத்துக்குள்ளே  தான் இருக்கிறோம். அடுத்த சந்ததிக்கு பரம்பரை அலகு மூலமே இயல்புகள்  கடத்தப்படுகின்றன. இப்போது கடத்துவதற்கு நோய்களை தவிர வேறு ஏதும் இல்லை. 

எனவே  சந்ததிகள் கலந்தாலே புதிய இயல்புகள் தோன்றக்கூடும். புதிய திறமைகள் மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு கூட உருவாகலாம். 


இருப்பினும்.. நாம் பிறந்தது முதல் சாதி பார்த்து வாழ பழகிவிட்டோம்.. என்ன செய்வது. சாதி பிரச்சனை எப்போது காதலில் தான் அதிகம், இதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் முகம் கொடுக்க தானே வேண்டும்... சமூகத்தில்  கௌரவம் இழக்க வேண்டி இருக்கும் , உறவினர்களை  இழக்க வேண்டி இருக்கும். இதனையும்  தவிர்க்கவேண்டும்  என்றால், சமூகத்தில் இந்த நிலைமையை மாற்றவேண்டும் . அல்லது யோசிக்கவேண்டும்.

அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

 1. உங்க ஆதங்கம் சரிதான்.மாறனும் இந்த நிலைமை

  ReplyDelete
 2. Rajkumar7:57:00 am

  நல்ல ஒரு தலைப்பில் தான் இதை எழுதியிருக்கீங்க.. நல்லது தமிழ் வாழ்த்துகள். உங்கள் எதிர்பார்ப்பு சரியாகும்.

  ReplyDelete
 3. Kumaarasooriyan8:00:00 am

  நான் சாதி பார்ப்பதில்லை, இருப்பினும் என்னை என்ன சாதி என்கிறார்கள். பாகு பாட்டியலில் தான் சாதி எல்லாம். இங்க தொல்லை தாங்க முடியல நண்பா

  ReplyDelete
 4. நன்றி உங்கள் கருத்துக்கு.. நண்பர்களே...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா