Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

போதைப்பொருளின் கைகளில்..

6 comments

எந்த தினசரி பத்திரிகையை பார்த்தாலும், ஏன் இணையத்தளத்தை பார்த்தாலும் செய்திகள் எல்லாம் போதை தான், இருப்பினும் அதிலே போதைப் பொருள் பாவனை என்பது அதிகமாக அடிபடுகிறது.
மூன்று தசாப்தங்களாக போரின் ஆக்கிரமிப்பினால் சீர்குலைந்து போயிருந்த யாழ்ப்பாணம் இப்போது அதே போன்ற இன்னுமொரு படுபயங்கரமான ஆபத்தை எதிர்நோக்கி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

போரின் பின் புனர்வாழ்வே இல்லாமல் தடுப்புகளில் ஒரு பகுதியினர், போர் முடிந்தும் மீள் குடியேற்றம் இல்லாமல் ஒருபகுதியும் ஏங்கி கொண்டிருக்கும் இந்த நிலையில், இன்னும் ஒரு பகுதியினர் சமூக, கலாச்சார அழிவுகளை எந்த தயக்கமும் இன்றி அரங்கேற்றி வருகின்றனர். வர்த்தக நகராகி வரும் எம் யாழ்ப்பாணத்தில் இப்போது விபச்சாரம், மற்றும் போதை வியாபாரம் சூடு பிடித்துவிட்டது. 

போதைப்பொருள்

போதைப்பொருள் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போமானால், போதை ஏற்றிக் கொள்வதற்காகவும், சிலரால் பொழுது போக்கிற்காகவும் உள் எடுக்கப்படுவவை. இந்த போதைப் பொருட்களில் மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும். 

ஐ.எம்.எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வளர்முக நாடுகளில் மது,போதை பாவனை அதிகரித்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் 17 நாடுகளை போதை பாவனை அதிகம் உள்ள நாடுகளாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எங்கட யாழ்ப்பாணம் போற போக்கு, போருக்கு பின் ஏற்பட்ட வளர்ச்சி இது என்பதை கல்வி சமூகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது. எப்படி இருந்த யாழ்ப்பாணம் இப்படி ஆகிவிட்டது என்று பார்ப்பவர்கள் புலம்பி தீர்க்கிறார்கள்.

எந்த பழக்கம் எப்படி ஏற்படுகிறது

பள்ளிப் பருவத்திலோஅல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும், சிலர் பொழுதுபோக்காகவும் பழகிக் கொள்கிறார்கள். கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலி மறந்து இருக்கவும் போதையைப் பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். 

எல்லோருக்கும் சுலபமாகவும், பரவலாகவும் கிடைத்துவிடும் போதைப் பொருள் தான் சாராயம் போன்ற மது வகைகள் மற்றும் சிகரட். இந்தப் பழக்கம் தற்போது பள்ளிப் பருவத்திலேயே பலரும் பழகிக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் ஆங்காங்கே அமைத்திருக்கும் மதுக்கடைகளும், இதற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் தான்.

திரைப்படங்கள் இத்தகைய பழக்கம், மகிழ்ச்சி மற்றும் துக்க வேளைகளில் மது தேவை என்ற மனோநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. படங்களில் சிறிய அளவில் தான் தடை என போடுகிறார்கள். ஆனால் படம் முழுவதுமே போதை இருக்கும்.

ஏற்படும் தீமைகள் 

போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் இப்போது உலக அளவிலே உருவெடுத்து நிக்கும் பிரச்சனையாகும். இதனால தனிமனிதன், குடும்பம், சமுதாயம் நாடு என பல படிகளிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

இவற்றின் பயன்பாட்டால் மூளையின் தொழற்பாட்டில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனூடு நடத்தை மாற்றங்களும் சிந்தனை தீர்மானங்கள் ஞாபகம் என்பனவும் மாற்றமுறுகின்றன. இவற்றைவிட போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டால் இவற்றுக்கு சுவாசப்பொறிமுறையின் திறனான செயற்பாட்டை குறைக்கும் இயல்பு காணப்படுகின்றது. இதனால் மிகைப் போதையூட்டப்படும் போது மூச்சுவிடுதல் அதாவது சுவாசப் பொறிமுறை பாதிப்புறும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

போதைப்பாவனையாளர்கள் பசியின்மை மற்றும் உணவை எடுக்கதவறுதல் போன்றவற்றுடன் தமது உடற்சுத்தம் போன்ற விடயங்களிலும் தவறும் தன்மை ஏற்படுகின்றது. இவற்றின் வழியே பொறுப்புகளில் இருந்து விலகுகின்ற தன்மை காணப்படும்.

இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. அவர் அந்த சூழலில் இருந்து விலத்தியவராக, விலக்கப்பட்டவராக தான் வாழ்கின்றார். போதைப்பொருட்களுக்கு அடிமையாகுபவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் மாதிரி ஆகிவிடுவார்கள். 

போதைப்பொருளை ஒழிக்கும் வகையில் கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி போதைப்பொருள் எதிர்ப்பு தினம் அனுஷ்டிப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி போதைப்பொருள் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படடுகிறது.


யாழ். மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி விடக்கூடிய இந்தப் பழக்கத்தைத் தடுக்க உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கல்விச் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

போதை ஒழிப்பை மேற்கொள்ள ஒவ்வொருபவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் போதை பொருள் ஒழிப்புக்கு பல சட்டங்கள் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல சகலரின் ஒத்துழைப்பும் அவசியம். இதன் மூலமே போதை பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

உங்களால முடிந்ததை செய்து இதை எம் உலகை விட்டு அகற்றுவோம்...

அன்புடன் sTn
Next PostNewer Post Previous PostOlder Post Home

6 comments:

 1. Anonymous11:17:00 am

  நல்ல இப்போது தேவையான ஒரு பதிவு

  ReplyDelete
 2. saravanapavan11:20:00 am

  யாழ்ப்பாணம் மிகவுக் சீரழிந்து விட்டது.. மிகவும் கவலையாக இருக்கிறது.

  ReplyDelete
 3. மாணவர்களுக்கு இது தேவையான பதிவுதான் very good

  ReplyDelete
 4. நன்றி அன்பு உள்ளங்களுக்கு...

  ReplyDelete
 5. உங்களது பொது நோக்கு பாராட்டுக்குரியது

  ReplyDelete
 6. @Sumiநன்றி நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா