Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கலைமாமணி கவிஞர் நா.முத்துக்குமார்

15 comments

கவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்களை பிரிப்பது என்பது சாத்தியமே இல்லை. வைரமுத்து காலத்தில் கவிதைகளாக பாடல்கள் வலம் வர தொடங்கியது.

தமிழ்த்திரைப்பட பாடல்களில் கவிதை முகம் தேய்ந்துவரும் கால கட்டத்தில், இசையமைப்பாளர்கள் கொடுக்கும் மெட்டுக்களில் அழகிய கவிதை மொட்டுக்களை பூக்க வைப்பதில் கைத்தேர்ந்தவர் கவிஞர் நா. முத்துக்குமார். சில பாடல்களை கேட்டாலே எனை மறந்து ரசிப்பேன். அப்படி எனக்கு பிடித்த பல பாடல்களை எழுதியவர் நா. முத்துக்குமார். அந்த வகையில் எனை கவர்ந்தவர் பற்றி உங்களுடன் சில நிமிடங்கள்...


கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
-------------

காதல் என்பது போதி மரம்
காயம் பட்டால் ஞானம் வரும்
காதல் என்பது பாலை வனம்
ஆனால் அங்கும் நிலவு வரும்
-------------

பூப்பறிக்க நீயும் போகாதே
உன்ன பார்த்தாலே
பூகளுக்குள் கத்தி சண்டையடி
பொட்டு வைக்க நீயும் போகாதே
உன்ன பார்த்தாலே
கண்ணாடி கைகள் நீட்டுமடி
-------------

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்
-------------

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
-------------

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் 
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் 
விழி ஓரத்தில்வரும் கனவு நீ


இப்படி பல பாடல்களின் சொந்தகாரர் தான் நா.முத்துக்குமார்


ஆரம்ம்ப வாழ்க்கை..

நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். 1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் திகதி அவரது தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் பிறந்தார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜு.

ஆதவன் ‘நெல்லு’ படத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். தன் பெயரையே முதல் வார்த்தையாகக் கொண்ட பாடல்மூலம் தன் வாசல் திறந்து கொண்டவர் நா. முத்துக்குமார். திரைப்படப் பாடல்களைக் கொண்டே முனைவர் பட்டமும் பெற்றிருப்பதும் இவருக்குரிய சிறப்பாகும். 

சினிமா பிரவேசம்..


முதலில் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்கிற ஆசையில் இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருந்தபின் பாடல்களின் பக்கம் அவர் திரும்பி இருக்கிறார் என்பதை விட திருப்பப்பட்டார் என்பது பொருந்தும்.  

அவரின் எழுத்துக்களை வாசித்த நண்பர்களின் மூலமாகவே அவருடைய திறமை வெளி கொணரப்பட்டிருக்கிறது. அவரது நண்பரான இயக்குனர் சீமானின் "வீர நடை" என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் பாடல் வரிகளை எழுதத்தொடங்கினார். தொடர்ந்து திரையிசையில் தன் முத்திரையைப் பதித்து வருகிற இவர் 2000 க்கு மேல் பாடல் எழுதியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும் வாய்ப்பும் பெருமையும் முத்துக்குமார் பெற்றுள்ளார். 2007 இல் அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனமும் எழுதியுள்ளார்.

இவரது தந்தை ஒரு தமிழாசிரியர் தந்தையின் லட்சக்கணக்கான சேமிப்பான புத்தகங்களுக்கு இடையே பயணமான சிறுவயது, அவரை ஆறுவயதில் இருக்கையிலேயே கவிதை எழுதத் தூண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாவல் மற்றும் பல கவிதை தொகுப்புக்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். தற்போதும் இயக்குனராக கதை தயார்படுத்தலில் தீவிரமாகவே உள்ளார். 

வீரநடையில் "முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவை புடிச்சிருக்கு.." என்ற அந்தத் திரைப்படப் பாடல், இதுவரை வந்த அவரது மற்ற பாடல்களை விட அதிக உவமைகளை கொண்டிருப்பதாக இலக்கியவாதிகள் கூறுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல், வரிகளுக்காக தவமிருக்காமல், வேகமாக வார்த்தைகளை இறக்குமதி செய்து பத்தே நிமிடங்களில் பாடலை எழுதி முடிக்கும் திறமைகொண்டவர் என முத்துக்குமார் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர் ரகுமானிலிருந்து இளைஞர் ஜி.வி ப்ரகாஷ் வரை அனைவர் இசையிலும் எழுதி இருக்கும் இவர் பல இசை அமைப்பாளரின் பாராட்டுக்களை பெற்றவர்.

அவரின் காதல் கவிதைகளும், பாடல்களும் இன்றைய இளைஞர்களின் காதலுக்கு உதவியாக இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. காரணம் அவர் கையாளும், அவரின் எளிய வரிகளில் காதலை எல்லோராலும் உணரக்கூடியதாக இருக்கிறது. பாடல்களில் கவிதை இருக்கும், கவிதைகளில் எளிமையான வார்த்தைகள், வரிகளில் கதை, பளிச்சென முகம் காட்டும் கருத்துகள். இவரின் பாடல் வெற்றிக்கு காரணமாகும்.

இவரை நான் பாடலாசிரியராக பார்ப்பதை விட கவிஞராகவே பார்க்க விரும்புகிறேன்...

கிடைத்திருக்கும் விருதுகள் சில

2005: Tamil Nadu State Film Award for Best Lyricist - Ghajini
2006: Filmfare Best Lyricist Award (Tamil) - Veyil
2007: Vijay Award for Best LyricistSivaji: The Boss
2009: Vijay Award for Best LyricistSiva Manasula Sakthi
2009: Filmfare Best Lyricist Award (Tamil) - Ayan

அன்புடன் sTn
Next PostNewer Post Previous PostOlder Post Home

15 comments:

 1. உங்கள் தகவலுக்கு நன்றிகள்

  ReplyDelete
 2. ஆழமான கவித்துவத்தை இவரின் எழுத்தில் தரிசிக்கலாம் கிராமம் நகரம் மாநகரம் தொகுப்பு நூல் எனக்கும் பிடிக்கும் இவரின் ஏழுத்து நடை இயல்பானது தீபாவளி படத்தில் உன்னைக்கண்ட நாள் ஒளி வட்டம் போல் உள்ளுக்குள் சுழலுதடி என்று நயமாக வார்த்தையை கோர்த்திருப்பார்!
  நல்ல பதிவு சகோ வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. @உயிரே..உங்களுக்கும் நன்றிகள்

  ReplyDelete
 4. @தனிமரம்நன்றி அண்ணா, உங்களுக்கு தெரிந்த மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 5. enathu, enakku pidiththa kavingan...

  ReplyDelete
 6. அருமையான பதிவு.. முத்துக்குமாரின் பாடல்கள் என்னையும் கவரும்..

  ReplyDelete
 7. my favorite lyrics writer then he was my advicer

  ReplyDelete
 8. @saaruநல்ல கவிஞா் தான்..

  ReplyDelete
 9. @saaruநல்ல கவிஞா் தான்..

  ReplyDelete
 10. @Riziநன்றி அண்ணா

  ReplyDelete
 11. @nelsonநன்றி நெல்சன்

  ReplyDelete
 12. Anonymous3:05:00 pm

  தற்போது 15 நிமிடத்திற்கு ஒருமுறை இவரது பாடல் எங்கோ ஓரிடத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது..!
  சிறந்த தகவல் தொகுப்பு...!
  நன்றி உயிர் தமிழ் :-)

  ReplyDelete
 13. @Anonymousஉண்மை தான் சிறந்த பாடலாசிரியர்..

  ReplyDelete
 14. Anonymous1:46:00 am

  எளிய சொற்களால் பாடல் எழுத தெரிந்த ஒரே கவிஞர் நா.முத்துக்குமார் வாழ்க அவர் தமிழ் நன்றி யாழ்_அகத்தியன்

  ReplyDelete
 15. நன்றி யாழ் அகத்தியன் உங்கள் கருத்துக்களுக்கு

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா