Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நட்பின் கதை..!! (01)

5 comments

உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, கல்லூரி காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது. நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை/ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்
நினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும். தொலைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை. நினைவுகள் அப்படி இல்லை. காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. அந்த ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிர்க்கும் நினைவுகளின் விம்பம்..இது

மூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை. கண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை. கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை. உண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை. கனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை. கசிகின்றன கண்கள், காதல் இல்லாததால் நட்புக்காக..

நட்பு எப்படிப்பட்டது, வித்தியாசமானது. காதலை விட ஒரு படி மேலானது. நதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு. தன்நலம் பாராத ஒரு உறவு. இப்படி இருக்கும் நட்புகளில் எப்படி நிலநடுக்கம்...?? இப்பொது நட்பென்றால் எனக்கு தெரிவது ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவது நட்பு, வேசமான பாசம் நட்பு என.

"கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு" இது சரியா "நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு" இது சரியா..? இது உங்களுக்காக. எனக்கு பிடித்தது நட்பு. வெப்பம்காய் பார்த்தால் இனிக்கும் சுவைத்தால் கசக்கும் அது போல இப்போது பிடிக்காதது நட்பு. என் எதிர்காலாம் சிதைந்தது நட்பினால், சிதைக்கப்பட்டது நட்பினால். சிதைத்ததும் நட்புத்தான். அணுகுண்டு தாக்குதலில் காணாமல் போகும் சிதைப்புகள் போல, என் வாழ்விலும் காணாது போனது நட்பு.

எப்போதும் எனை சுற்றியிருக்கும் நட்புகள் ஏராளம். என்னில் வெற்றிடம் ஆக்கப்பட்டிருப்பதும் அது தான். 

உயிர் நட்பின் ஆரம்பம்...

எனக்கும் நட்புக்கும் இடையேயான நெருக்கம் 7 வயதில் ஆரம்பம் (1997). புதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல எனக்கும், நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயது. ஆனால் எல்லாமே அவன் தான் போல் ஏக்கம். வளர வளர அது தான் நட்பாக பலமடைத்தது. ஒரு தசாப்தத்தை தாண்டி சென்றது எனக்கும் அவனுக்குமான நட்பு. பல்வேறு படிகளை தண்டி பயணித்து கொண்டிருக்கையில் தான், இரண்டாவது நட்பின் ஆரம்பம்.

எனக்கு வயது அதிகம் அல்ல, அனுபவம் அதிகம். 2004 இல் தான் அந்த புது உதயம். பறக்கும் இருபறவைகளுடன் புதியதாக ஒரு பறவை. வித்தியாசமான நோக்கமுடயவனாக இருந்தாலும் நட்புக்குள்ளே ஐக்கியமாகி விட்டான். எமக்குள்ளே சில சண்டைகள். பிரிவென்பது வந்ததே இல்லை. இந்த பயணத்தில் வித்தியாசமா உறவு இருந்தது எனக்கும் 2006 இல் இணைந்து கொண்டவனுக்கும் தான். இது தான் என் கல்லூரி சோலையில் பூத்த பூக்கள். புதையல் தேடி எங்கும் அலைந்து இறுதியில் கடற்கரையிலேயே கரையேறிய கிடந்த தங்க மீன்கள் தான் என் நட்புகள்.

இது வரை பெயர் குறிப்பிடாமல் இந்த பயணத்தில் நீண்டதூரம் வந்துவிட்டோம். இது போல தான் எனக்கும் அவர்களுக்குமான நெருக்கம் இப்போது. சாத்திய கதவினுள் இருந்து எட்டிப்பார்க்கும் சிறுமியை போலே எமக்குள்ளே காதல்கள் எட்டிப்பார்க்காமல் இல்லை, காதல் தோல்விகளே விடைகள்.

அன்புடன் -sTn-
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

 1. Anonymous9:21:00 pm

  உவமைகளின் அணிவகுப்பு வாழ்த்துக்கள் தமிழ்

  ReplyDelete
 2. தமிழ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நன்றி உறவுகளே...

  ReplyDelete
 4. super...sanju வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. @உயிரே.. நன்றிகள் உங்கள் வாழ்த்துகளுக்கு...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா