Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நட்பின் கதை..!! (02)

8 comments

காதலின் பரிசு வலிகள் தான்

காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற்களைப்போல் பாசம் கிடைத்தாலே காதல் தான். இது தான் காதலா என்று வெக்க வைத்ததும் அதே காதல் தான்.

பூக்கும் மரங்களில் சில பூக்கள் தான் கனி வராமல் காய்ந்து போகும் அது போல் எனக்குள் வந்த காதல். தெரு முனையில் தெரியும் கானல் நீர் தான் ஒருதலைக்காதல். அமாவாசையில் கூட எங்கோ ஒரு மூலையில் மின்னும் நட்சத்திரம் தான் அதன் பின் வாழ்வு. பூட்டிய வீட்டுக்குள் குழந்தை, சாவியை தொலைத்த தாய், காதல் தொலைந்த பின் நிம்மதி தொலைந்த நினைவுகளும் நானும்.

பட்டம் பூச்சிகள் தூக்கி வைத்து விளையாடும் தேவதை போல் அவள். நில் என நிக்கும் நிலவு அவள் முகம். பார்ப்பவர் எனை கிண்டலடிப்பது புரிகிறது. ம்ம்ம் அப்படி ஒன்றும் அவள் அழகில்லை தான், இருந்தும் அவள் போல் தேவதைகளே இல்லை. 

காதல் எனக்கு சொல்லி தந்ததெல்லாம் கவிதைகள் தான். தோற்றுப் போனது காதல். இன்றும் நிலைப்பதும் காதல். மனதில் உள்ள மொத்தத்தையும் சொல்ல முடிவதில்லை பிரிவுகள் நிறைந்த எந்த பயணத்திலும்.. சத்தியசோதனை எழுத நான் காந்தியில்லை. இன்னும் காதல்கள் என் நட்புகளின் வாழ்க்கையிலும்.

பாலைவனத்து ரோஜா தான் என் முதல் நண்பனின் காதல், மழை கிடைத்தாலே அதன் ஜனனம். ஜனனித்தாலும் அது எல்லாம் முட்களே. கண்ணீரில் வளரும் காதல் ரோஜா. ரோஜா பூத்ததோ இன்னொரு கல்லூரி நண்பனின் தோட்டத்தில் தான். தடுமாறும் வாழ்கையில் மரந்தாவும் மனம் என்ன செய்யும்.

காதல் எவனைத்தான் விட்டு வைக்கும், காதல் நோய்க்கு கண்ணீர் தான் மருந்து, காதல் வந்து போனதன் தடம் தான் கவிதை, கவிதையே காதல் தந்த பரிசு. அவள் முதல் பட்டது அவன் கண்ணில் தான் காட்சிகள் அவன் இதயத்தில் மட்டுமே, காட்சிகள் கவிதையாகும் காதல் இது... இதயத்தில் தோன்றி கண்களில் முடிந்தால் கண்ணீராம்.. கண்களில் தோன்றி இதயத்தில் முடிந்தால் காதல் தானே..

காலில்லாமல் ஓடும் பந்தயகாரன் போல் எம் மூவரின் வாழ்வும். எது சூனியக்காரர்களின் பூமி அல்லவா. சொர்க்கம் நரகம் இரண்டும் இங்கே தான். மதில் மேல் காற்றால் கொண்டு வந்து போடப்பட்ட பஞ்சு போல் நாம், அடுத்த காற்றில் எங்கே போவோம், இந்தபக்கம் சொர்க்கம், மறுபக்கம் நரகம்.. வலிகளுடன் சுத்திய எம் வாழ்வும் ஆட்டம் காணாமல் இல்லை.

எது நட்பின் கடைசி அல்ல வாழ்வின் அந்தி.

இறுதியாக இணைந்த அந்த நண்பன் விரும்பி விலகிக்கொண்டான். அடுத்தவனும் விலகிக் கொண்டிருந்தான். கிணத்துக்குள் விழுந்தவனை தண்ணீர் மூன்று முறை தான் மேலே உயர்த்தும், ஆனால் என்னை மூன்று முறையும் கீழே தான் அமிழ்த்தியது. பதின்மூன்று வருடங்கள் (1997-2010)என்னுடன் பயனித்தவனின் பிரிவு. எப்படி எதற்காக இந்த முரண்பாடுகள். இது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. சமாதானங்கள் வந்தாலும் நெருக்கம் வரவில்லை. பிரிதலின் பின் புரிதல் கடினம் தானே. 

எனக்கு ஏதும் தெரியாது, என்னை விட அவனுக்கு அதிகம் பிடித்த நண்பர்கள் இருக்கிறார்கள் போல. அதனால் கூட பிடிக்காமல் போகலாம். தனது சந்தோசங்களை பகிர்ந்து கொள்ள இனோருவன் இருந்தால் அவனுக்கு அவன் தானே நண்பன், இப்படியே நினைத்து கவலைப்பட்டேன். இறுதியில் ஒரு விடயம் சொன்னான். உண்மையில் அது உண்மையாக தான் இருந்தது.

"நீ என்னை உயிர்நண்பன் என்று நினைப்பதற்கு நான் ஒன்றும் செய்யேலாது, நீ அப்படி நினைக்கலாம் ஆனால் நீ எனக்கு சாதாரண நண்பன் தான்" என்று. 

இலவு காத்த கிளியாக இவ்வளவு காலமும் ஏமாந்து விட்டோமே என்ற ஏக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால் இப்போதாவது தெரிந்து கொண்டோமே என்பது சந்தோசம் தான். அதற்கு பிறகு நான் என்ன சொல்ல முடியும். மழை நேரத்தில் நனைந்துகொண்டிகும் குடை வெயிலிலும் காய்கிறது தானே.

மூவரும் இன்றும் நல்ல நண்பர்கள் தான், அவன் சொன்னது போல் சாதாரண நண்பர்கள். அவனுக்கு உயிர் நண்பன்/நண்பி இருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது உயிர் நண்பன்/ நண்பர்கள் யாரும் இல்லை. ஒருவருக்கான இடத்தில் இனொருவர் எப்படி...??

இவர்கள் தான் என் சோலையில் பூத்த பூக்கள்.
.

பகுதி 01 ஜ பார்வையிட..

* எதுவும் ஒரு கல்லூரியின் கதை தான்... பார்வையிட 

அன்புடன் -sTn-
Next PostNewer Post Previous PostOlder Post Home

8 comments:

 1. Anonymous9:25:00 pm

  உவமைகளின் அணிவகுப்பு வாழ்த்துக்கள் தமிழ்

  ReplyDelete
 2. Anonymous7:59:00 pm

  super....!!da

  ReplyDelete
 3. நன்றி உறவுகளே...

  ReplyDelete
 4. உங்க நண்பர்கள் உங்களுக்கா தான்.. சுவையான காதல் விளக்கம்...

  ReplyDelete
 5. சொல்ல மறந்துடன் Super, nice வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. Anonymous8:16:00 pm

  உங்கள் நட்பு மீண்டும் தொடரும்... அல்லா இருக்கிறார்

  ReplyDelete
 7. @Anonymous நன்றி நண்பா..உங்கள் ஆசிகளுக்கு

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா