Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பிறைதேடும் இரவிலே உயிரே...

7 comments

பிறைதேடும் இரவிலே.. உயிரே..
எதைத்தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா....


வரிகள் : தனுஷ்
எல்லோரும் படத்தை பற்றி அதிகம் விமர்சித்துவிட்டார்கள். எனவே அதை அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கும் உங்களுக்கும் பிடித்த பாடல் பற்றியே என் பதிவு.. November25 அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த செல்வராகவன் இயக்கத்திலும், தனுசின் நடிப்பிலும் வெளிவந்த படம் தான் மயக்கம் என்ன??. கேள்வி கேக்கும் தலைப்பாக இருக்கும் இந்தப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. அரைத்த மாவையே அரைக்கும் இப்போதைய இயக்குனர்கள் போலல்லாது வித்தியாசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை படைத்திருக்கிறார் செல்வராகவன். (செல்வராகவன் என்றாலே வித்தியாசம் தான்). இந்த இனிய யதார்த்தத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

சிலர் மயக்கம் என்ன மிகமெதுவான திரைக்கதை, தொய்வாக நகருகிறது, சில இடங்களில் ஒட்டவில்லை என்று குறையான விமர்சனங்களை வீசுகிறார்கள். என்னைப்பொறுத்தவரையில்  வேகமாக கதை நகர்தலின் தேவை  மயக்கம் என்ன படத்துக்கு இல்லவே இல்லை. அதிரடி அச்டின் படக்களுக்கு தான் அந்த தேவை உண்டு. இது அதிரடி படம் இல்லை. காதலுடன் இயல்பான வாழ்க்கையையும், யதார்த்தையும் சொல்லும் படம். காதல் பற்றி முதல் பாதியில் தவறான அபிப்பிராயம் வந்தாலும், பின்னர் கணவன் மனைவி உறவு இப்படி தான் என்று கூறி அசத்தியிருக்கிறார் செல்வராகவன்.

இந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து சாராரையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் கேக்க பிடிக்காதவர்களும் இபோதும் கேக்கும் பாடல் மயக்கம் என்ன தான். "ஓட ஓட தூரம் குறையல", "காதல் என் காதல்.. " பாடல்கள் இளைஞர்களையும். "நான் சொன்னதும் மழை வந்துச்சா", "பிறைதேடும் இரவிலே உயிரே" பாடல்கள் பெண்களை மட்டும் அல்லது ஆண்களையும் கவர்ந்து மயக்கம் ஆக்கிவிட்டது என்பது உண்மை. இவற்றின் வெற்றிக்கு காரணம் இதில் பாடல்கள் கானா + மெலடி என இருப்பது தான். இதை விட வரிகள் அற்புதம், பாடலாசிரியாராக அவதாரம் எடுத்துள்ள தனுஸ் தன் பேரையும் பதித்துவிட்டார். ஜீவி.பிரகாஸ்குமார் பின்னணி இசையிலும் தன் திறமையை காட்டி இருக்கிறார். 

இந்த வருடத்தில் எனக்கு பிடித்த இரு பாடல்கள் இந்த படத்தில் உள்ளன. ஒன்று "நான் சொன்னதும் மழை வந்திச்சா" மற்றையது "பிறை தேடும் இரவிலே". இந்த இரண்டிலும் என்னை அதிகம் ரசிக்க வைத்தபாடல்  "பிறைதேடும் இரவிலே"  தான். தன்னுடைய எதிர்கால மனைவியான பாடகி சைந்தவியுடன் இணைந்து ஜீவி.பிரகாஷ்குமார் காதல் வழிய பாடியிருக்கிறார். 

ஜி வீ .பிரகாஷ் இன் இசையிலும் சைந்தவியின் குரலிலும் நான் கேட்ட நான்கு பாடல்களும் அற்புதம் தான்.

பாடல் : ஆருயிரே...
திரைப்படம் : மதராசபட்டணம்
பாடகர்கள் : சைந்தவி, சோனு நிகம்
இசை : G.V. பிரகாஷ்

பாடல் : விழிகளில் ஒரு வானவில்
திரைப்படம் : தெய்வத்திருமகள்
பாடகர்கள் : சைந்தவி
இசை : G.V. பிரகாஷ்

பாடல் : நான் சொன்னதும் மழை வந்துச்சா
திரைப்படம் : மயக்கம் என்ன
பாடகர்கள் : நரேஷ் ஐயர், சைந்தவி
இசை : G.V. பிரகாஷ்

பாடல் : பிறைதேடும் இரவிலே..
திரைப்படம் : மயக்கம் என்ன
பாடகர்கள் : GV. பிரகாஷ், சைந்தவி
இசை : G.V. பிரகாஷ்

இதோ பாடல்..

பிறைதேடும் இரவிலே.. உயிரே..
எதைத்தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

(பிறைதேடும் இரவிலே..)

இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி.

(பிறைதேடும் இரவிலே...)

அழுதால் உன் பார்வையும் 
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் 
சோகம் தீர்க்கும் போதுமா 
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா .....

என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி.

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

(பிறைதேடும் இரவிலே...)

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே

இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்..

--------

பிறைதேடும் இரவிலே.. உயிரே..
எதைத்தேடி அலைகிறாய்..

இஸ்லாமியர்கள் தான் தமது நோன்புகாலத்தில், பிறைக்காக காத்திருந்து பின்னர் விரதத்தை முடித்துக்கொள்வார். அத்தனை அமைதியான இரவிலும் மனதிலும் ஆரவாரம் என்பதை சொல்கிறார் போலும். 

////இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா../////

////நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா ...../////

////விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே...////காதலனாகிய தன் கணவனின் அந்த சோகத்தின் போது, மனைவி ஒரு தாய்போல் ஆதரவு கொடுப்பதாக கூறும் கவிஞர் ஒரு குடும்ப வாழ்க்கையை கணவன் மனைவி உறவை அப்படியே பிரதிபலிக்கிறார். ஆண் பெண் இருவரது சிந்தனையும் ஒருவாறாக இருப்பதில்லை ஆனாலும் அனுசரித்தலுடன் இருப்பது தான் கணவன் மனைவி என்னும் சொந்தம்.  ஆணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, அனல் மேலே வாழ்வதாகவும், மனம் ஒருநிலை அல்லாமல் நதியைப் போல் பாய்கிறது எனக்கூறி விடுகிறார். அப்படி இருக்கும் கணவனை காதலாலும் அன்பாலும் மனைவி மாற்றமுயலும் மனைவியின் ஏக்கம் தான் ithu. இந்த வரிகள் பெண்குரலில் வந்து அப்படியே மிதக்கவைக்கிறது. 

இடைக்கிடையே வரும்

உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி..
வரிகளும்..

என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி.. 

வரிகளும், இதமான ஆண் குரலும் இசையோடு இணைந்து கடந்து போகையில் அந்த உலகத்தில் வாழ வேண்ட்டும் என்ற ஏக்கத்தை அது ஏற்படுத்த தவறவில்லை... ஒருமுறை பாருங்களேன்.. 


உங்களை அறியாமலே ஒரு ஈர்ப்பு வந்திருக்குமே...


-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

7 comments:

 1. ஒரு ஒரு தடவையும் இந்த பாட்டை டி.வி.யில் பார்க்கும் பொழுது...
  ஈர்த்து கொண்டே இருக்கிறது...

  ReplyDelete
 2. @ஜெட்லி...நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு, குரல்,இசை,வரிகள் மூன்றின் சோ்க்கை தான் இந்த ஈா்ப்புக்கு காரணம்.

  ReplyDelete
 3. அன்பு8:50:00 pm

  அருமையான விமர்சனம் தமிழ் நிலா....

  ReplyDelete
 4. நல்ல பதிவு... பாடல் சூப்பர். தனுஸ் கவிஞராக வலம்வரலாம்...

  இன்று என் பதிவு...9 போதிதர்மர்களில் யார் உண்மையான போதிதர்மன்..

  ReplyDelete
 5. @என்னைத்தேடி..ஹர்ஷன்உண்மைதான் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு...

  ReplyDelete
 6. நீங்கள் நல்லதொரு ரசனைமிக்க மனிதா். நல்ல பதிவு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. @AMMUநன்றி அம்மு

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா