Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

யாழ்.இலக்கியக் குவியத்தின் “நாம்”

12 comments

யாழ்.இலக்கியக்குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 08.01.2012 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி மண்டபத்திலே கவிஞர்வேலணையூர் தாஸ் தலைமையில் இடம்பெற்றது.

"மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்அறிமுக உரையினை கவிஞர் நெடுந்தீவு முகிலன் நிகழ்த்தினார். இவர்தனது உரையில் இவ் இதழ் தொடர்ந்து வரவேண்டியதன் அவசியம்குறித்து விளக்கியிருந்தார். தொடர்ந்தும் வெளியீட்டுரையினை நிகழ்த்தியகலாசார உத்தியோகத்தர் ரஜீவன் யாழ்ப்பாணத்திலே இலக்கிய முயற்சிக்குஇருக்கும் ஆதரவுகள் குறைந்து வருகின்றன எனவும் இதற்கு காரணம் எம்மக்களிடையே வாசிப்பு பழக்கம் இல்லாமையே ஆகும் என்றார். மற்றும்ஈழத்து இலக்கிய முயற்சியிலே எவர் ஒருவரும் தனித்து நின்று போராடவேண்டியிருக்கின்றது எனவும் இதற்கான ஆதரவுகள் இல்லை எனவும்எடுத்து கூறியிருந்தார். ஒவ்வொரு படைப்பாளியும் இரண்டு வாசகனைஉருவாக்க வேண்டும் அப்போதுதான் இலக்கியம் எழுச்சி பெறும் என்றார்.தமிழின் முக்கியத்துவம் பற்றி கூறிய இவர் தமிழுக்கு மெய் பதினெட்டுஎனவே தமிழ் என்றுமே இளமையானது என்றார். இங்கு காதல்கவிதைகளின் புறந்தள்ளல் இடம்பெறுகின்றது என் கூறிய இதனைஉடைத்தெறிந்தே இந்த நாம் என்ற சஞ்சிகை வெளிவந்திருப்பதாகவும்இந்த முயற்சிக்கு எம் ஆதரவை நல்க வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டார்.

அடுத்து “நாம்” Facebook கவிதைகள் சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டது. சஞ்சிகையின் முதற்பிரதியை திரு.தே.தேவானந்(பணிப்பாளர், ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிநிலையம்,யாழ்.பல்கலைக்கழகம்.) அவர்கள் வெளியிட்டு வைக்க டாக்டர்சு.நவரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகமாணவன் திரு.அர்ஜுன் இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளம்என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை விளக்கி அதன் நன்மைதீமைகளை எடுத்துக்கூறியிருந்தார். அத்துடன் இணையத்தளத்தினை நாம்எவ்வாறு எமது இலக்கிய முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும்வேண்டத்தகாத இணையத்தளங்களை முடக்கி அதனை எவ்வாறு எமக்குகாண்பிக்காத வகையில் செய்யவேண்டுமென்பதையும் விளக்கியிருந்தார்.

தொடர்ந்து உரையாற்றிய திரு.குணேஸ்வரன் அவர்கள்இன்றைய எம் சமூகத்தில் இணையத்தள பாவனை என்பது தப்பான ஒருவிடயமாக நோக்கப்படுகின்றது எனவும் அதனை இல்லாமல் செய்யஅனைத்து Netcafe களும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

சிறப்புரையாற்றிய திரு.கே.றுசாங்கன் (பணிப்பாளர், சிகரம்ஊடக இல்லம், யாழ்ப்பாணம்) அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தினைஉணர்த்திய இவர் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த போதும் அச்சு என்பதுமுக்கியமானதாக இருப்பதாகவும் இதனாலேயே இன்று இந்த Facebookஇதழ் வடிவில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்றார். மேலும் கவிதைகள்முக்கியம் செய்திகளும் முக்கியம் என உணர்த்திய இவர் தமிழ்ஊடகங்களிற்கு நல்ல செய்தியாளர்களின் வருகை அவசியம் என்பதன்முக்கியத்தினை வலியுறுத்தியிருந்தார். கலைஞர்கள் இன்னும் வளரவேண்டும் என வாழ்த்தி தனதுரையினை நிறைவு செய்தார்..

பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்திய திரு.தே.தேவானந்(பணிப்பாளர், ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிநிலையம்,யாழ்.பல்கலைக்கழகம்.) அவர்கள் ஒவ்வொருவரின் படைப்புக்களும் எம்நாட்டை எம் சமூகத்தை பெருமைப் படுத்துவதாக வரவேண்டும் என்றுகூறினார். இவர் ஊடகவளங்கள் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகளையும்சுட்டிக் காட்டிய இவர் இனி இவ்வாறான படைப்புக்களைவெளிக்கொண்டுவருவதற்கு தமது ஊடகவளங்கள் பயிற்சிநிலையம்தம்மாலான முழு ஒத்துழைப்பையும் நல்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இறுதியாக கவிப்பொழுது என்கின்ற “நாம்”கவிஞர்களின் நேரடி கவியாற்றுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.எமது இளம் கவிஞர்களின் இலக்கிய ஆளுமைக்கு இது சிறந்த ஒருகளமாக அமைந்த்து குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வாறான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு ஈழத்து இலக்கியத்தினை மேலும் வளர்க்க வேண்டியதேவை இருக்கின்றது"


இந்தமுயற்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும். வாழ்த்துகள் யாழ் இலக்கியக்குவியம். மற்றும் இந்த தகவல் எல்லோரையும் சேரவேண்டும் என்பதற்காய் உங்கள் உயிரான் இணையத்தில் இருந்து எடுத்து இதில் இணைத்துள்ளேன். இந்த சிறிய பணியில் உயிர்த்தமிழும் இணைந்து கொள்கிறது. 

யாழ்பாணத்தில் பூபாலசிங்கம் புத்தக சாலை அன்னை புத்தக சாலை தட்டாதெரு சந்தி கணபதி புத்தக சாலை . மெகா டிஜிற்றல் கச்சேரி யாழ்ப்பாணம்.ஆகிய இடங்களில் நாம் விற்பனை யாகிறது.மேலதிக தகவலுக்கு 0776284687 .

எம் மண்ணின் கலை படைப்புக்கள் மேலும் வரவேண்டும் வாழ்த்துக்கள்

அன்புடன் sTn
Next PostNewer Post Previous PostOlder Post Home

12 comments:

 1. Vaalththukkal

  ReplyDelete
 2. Best wishess

  ReplyDelete
 3. @Rameshஇலக்கியக்குவியம் சார்பாக நன்றிகள்

  ReplyDelete
 4. பிரியன்7:15:00 am

  நாம் இளம் கலைஞா்களின் ஒருவழிகாட்டி வாழ்த்துக்கள். யாழ் இலக்கிய குவியம். உங்கள் படைப்புக்கள் தொடர இறைவனின் ஆசி உண்டு

  ReplyDelete
 5. Anonymous7:16:00 am

  தொடரட்டும் இலக்கியப்பணி

  ReplyDelete
 6. yal elakkiya kuviyam12:45:00 pm

  Thangalathu tamil elakkiya pani thodarattum

  eniya pongal thirunal valthukkal

  ReplyDelete
 7. @yal elakkiya kuviyam நன்றி உங்கள் கருத்தையும் இங்கு வழங்கியதிற்கு. உங்கள் பணி நாம் புத்தகத்துடன் நின்றுவிடாது. பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்பது சிறியேனின் கோரிக்கை

  ReplyDelete
 8. உங்கள் கவிதைகளும் இடம்பெற்றுள்ளதா...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா