Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

Aazhi (ஆழி) Short film (with english subtitles)

Leave a Comment
ஏதாவது ஒரு படம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட ஆசை, ஈழ சினிமா என்பது மிகப்பெரியது, அதில் எங்களுக்கு புரிதல்களுக்கு இடங்கள் குறைவு, எத்தனையோ ஆளுமைகள் கடந்து வந்த பாதை, இங்கிருந்து சென்று இந்திய சினிமாவில் சாதித்தவர்களும் உண்டு, அப்படியான இந்த சினிமாவில் எங்கள் உள்ளீடும் இருக்க வேண்டும் என்பது அவா,
இது நாங்கள் எடுத்த ஒரு குறும்படம் பற்றிய தகவல். இந்த காலப்பகுதியில், நடந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பாதிப்பில் உருவானது, இது எமது முதல் படைப்பு, இதற்கு சில விருதுகளும் கிடைத்தது. 
இளமை FM நடாத்திய குறும்பட போட்டியின் வெற்றிப் படமாகவும், சிறந்த கதை அமைப்பு, சிறந்த இயக்குனர் விருதினையும் பெற்றுக்கொடுத்தது எமது ஆழி குறும்படம். 

France Bollywood Couture, கங்கைவேணி கைலைவாசன்  அவர்களின் தயாரிப்பில், பிரியனின்  இசையில், பானுவின்  ஒளிப்பதிவு /படத்தொகுப்பிலும், துசியந்தன், கிருசாலினி, விமல்ராஜ், ரமேஷ் மற்றும் பேபி கிருசாலினியின் நடிப்பிலும்,

எனது திரைக்கதை, வசனத்தில் உருவான அழகிய குறும்படம், இதில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். கதை மற்றும் இயக்கம் S.A.நிலான். 

S.A.நிலான் வளர்ந்து வரும் ஒரு சிறந்த இயக்குனர், கலைஞர் தேர்வுகளை சரியாக செய்யக்கூடியவர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பிலும், திறமையானவர். அதனால் எல்லாத்துறைகளிலும் ஈடுபாடுடன் செயற்பட்டு வெற்றிப்படைப்புகளை உருவாக்குபவர். 



எங்கள் படைப்பிற்கு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.



-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா